For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் தன்னாட்சி பிரதேசமான தைவானுக்கு அமெரிக்க தூதுக்குழு சென்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்பபு தெரிவித்துள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம்" என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

Recommended Video

    Trump-ஐ விளாசிய Joe Biden-Kamala Harris | First Campaign | Oneindia Tamil

    அமெரிக்க-சீனா உறவுகள் வர்த்தகம் தொடங்கி இராணுவம் , கொரோனா வைரஸ் தொற்றுநோய் என பல்வேறு சிக்கல்களால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு அமெரிக்க தூதுக்குழு வந்ததுடன் விஷயத்தில் கொரோனாவை சீனா கையாண்ட விதத்தையும் விமர்சித்தது. தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியாக எண்ணும் சீனா, அமெரிக்கர்களின் வருகை மற்றும் பேச்சால் கடும் கோபமடைந்துள்ளது.

    அமெரிக்காவின் சுகாதாரத் தலைவர் அலெக்ஸ் அசார் தைவானுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளனார். அவர் தைவானில் நேற்று இருந்த போது தொற்றுநோயை சீனா கையாண்டதை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையால் வெறுக்கப்பட்ட முன்னாள் தைவான் அதிபரின் சமாதிக்கு சென்று செய்தார்.

    அமெரிக்கா பயணம்

    அமெரிக்கா பயணம்

    சீனா இந்த பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. "எந்த காரணம் என்றாலும் அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான பரிமாற்றங்களை சீனா உறுதியாக எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

    நெருப்புடன் விளையாட்டு

    நெருப்புடன் விளையாட்டு

    "சீனாவின் முக்கிய நலன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில், அமெரிக்காவில் சிலர் மாயைகளைக் கொண்டிருக்கக்கூடாது. நெருப்புடன் விளையாடினால் எரிக்கப்படுவீர். வேண்டாம். .கடுமையாக எச்சரிக்கிறோம். தைவான் அதிகாரிகளுக்கு நான் நினைவூட்ட விரும்புவது , மற்றவர்களுக்கு அடிபணிய வைப்பது, வெளிநாட்டினரின் ஆதரவை நம்புவது, சுதந்திரத்தைத் தொடர வளைந்து கொடுப்பது போன்ற செயல்களை செய்யவே கூடாது " இவ்வாறு ஜாவோ கூறினார்.

    டிரம்ப் விமர்சனம்

    டிரம்ப் விமர்சனம்

    1949 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி பிரதேசமான தைவான் "ஒரு சீனாவின்" ஒரு பகுதியாக உள்ளது. கொரோனா பிரச்சனைக்கு பின்னர் சீனா மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் கடைபிடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தைவான் விஜயத்தை சீனா கருதுகிறது

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இதனிடையே அமெரிக்க தூதுக்குழுவைச் சேர்ந்த அசார் பேட்டி அளிக்கும் போது, "பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றில் தைவான் எங்கள் நண்பன் என்று கூறினார். தைவான் தங்கள் கூட்டாளி என்றும் தொடர்ந்து ஆதரிப்போம் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை விட தைவான் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டது. இப்படி சீனா நடந்திருந்தால் விரைவில் கொரோனா தடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

    நெருப்புடன் விளையாடுகிறது

    நெருப்புடன் விளையாடுகிறது

    இதுதான் சீனாவிற்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. தைவான் அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அதையும் மீறி பயணத்தை அமெரிக்கா தொடர்ந்துள்ளது. எனவே தான் சீனா அமெரிக்காவை நெருப்புடன் விளையாடுவதாக எச்சரித்துள்ளது.

    English summary
    "On issues involving China's core interests, some people in the US must not harbour illusions, those who play with fire will get burned," said chines foreign ministry spokesman Zhao Lijian over Taiwan visit
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X