For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலைவனத்தை குறி வைத்து.. சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. சீனா நடத்திய "லைவ் - போர் பயிற்சி".. ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது சீனா தனது வடமேற்கு பிராந்தியத்தில் அதிரடியாக ஏவுகணை சோதனையை செய்துள்ளது.

இந்தியா - சீனா இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. லடாக்கில் இரண்டு நாட்டு படைகளும் போர் வீரர்களை குவித்து வருகிறது.அதேபோல் எல்லையில் நவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு விமான படைகளும் எல்லையில் போர் விமானங்கள், ஏவுகணைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் இன்று பிரான்சிடம் இருந்து 5 ரபேல் விமானங்கள் வாங்குகிறது. இந்திய விமானப்படையில் இந்த ரபேல் விமானங்கள் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுகிறது.

நீண்டகாலமாக சீனா குறிவைத்திருக்கும் அருணாச்சல பிரதேச எல்லையின் ஜெமிதாங் சர்க்கிள் நீண்டகாலமாக சீனா குறிவைத்திருக்கும் அருணாச்சல பிரதேச எல்லையின் ஜெமிதாங் சர்க்கிள்

ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

இந்த நிலையில்தான் சீனா தற்போது ஏவுகணை சோதனையை செய்துள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ ராணுவத்தின் 75வது படைப்பிரிவு இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. டக்லமாக்கான் பாலை வனத்தில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை சோதனை நடந்துள்ளது.

இரண்டு வகை

இரண்டு வகை

மொத்தம் இரண்டு விதமாக இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீனா புதிதாக உருவாக்கிய ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் சென்று தாக்கும் சிறிய சிறிய ஏவுகணைகளை சீனா உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணைகள் நேற்று சோதனை செய்யப்பட்டது. சீன ராணுவத்தில் இந்த ஏவுகணைகள் இன்னும் இணைக்கப்படவில்லை. இந்த நிலையில் இதன் சோதனை நடந்துள்ளது.

இரண்டாவது சோதனை

இரண்டாவது சோதனை

இன்னொரு பக்கம் சீனா தனது பழைய ஏவுகணைகளை வைத்து போர் பயிற்சிகளை செய்துள்ளது. தீவிர லைவ் போர் பயிற்சியை சீனா அங்கு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அங்கே கொண்டு வரப்பட்டது. ஏவுகணைகளை ஏவி, சரியாக இலக்குகளை தாக்கி சீனா இந்த பயிற்சிகளை செய்துள்ளது. நான்கு மணி நேரம் சீனா இந்த போர் பயிற்சியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் சோதனை

ஏன் சோதனை

இந்தியாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த ஏவுகணை சோதனை முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிரான சோதனை மட்டும் இல்லை. தைவானுக்கும் சவால் விடும் வகையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் சீனாவின் எல்லை அருகே தைவான் ஏவுகணை பயிற்சி மேற்கொண்டது.

தைவான் எப்படி

தைவான் எப்படி

சீனாவின் எல்லைக்கு அருகே 10க்கும் அதிகமான புதிய ஏவுகணைகளை தைவான் சோதனை செய்தது. அமெரிக்காவின் உதவியுடன் தைவான் இந்த சோதனையை செய்தது. இதன் காரணமாக கோபம் அடைந்த சீனா அங்கு போர் விமானங்களை அனுப்பி உள்ளது. இதனால் தற்போது சீனா எல்லையில் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது .

English summary
Chinese army did a live missile test and drill in the NW desert border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X