For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததால் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சிற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்படும். அதாவது ரூ 45 ஆயிரம் கோடி வருமானத்தை இந்த சீன நிறுவனம் இழக்கும் என சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எல்லையில் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து சீனா மீது பொருளாதார தடை நிகழ்த்த வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை எழுப்பினர்.

இந்த நிலையில் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேன்னர் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்தது. அதிலிருந்து பிளே ஸ்டோரில் அந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்களை செல்போன் நிறுவனங்களே நீக்கியது.

2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்

ரூ 45 ஆயிரம் கோடி

ரூ 45 ஆயிரம் கோடி

இது தொழில்நுட்பத் துறை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சீனா மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்காகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்டாக் உள்ளிட்டவற்றில் தாய் நிறுவனமான பைட் டான்ஸுக்கு ரூ 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

சென்சார் டூவர்

சென்சார் டூவர்

செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் சென்சார் டூவர் அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி கடந்த மே மாதம் டிக்டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய சந்தையில் மொத்தத்தில் 20 சதவீதம் ஆகும். இது அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ததை விட இரு மடங்காகும். தற்போது இந்த செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்ததால் சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய வருவாய்

முக்கிய வருவாய்

டிக்டாக் செயலிக்கு முக்கிய வருவாய் கொடுக்கும் நாடாக இந்தியா இல்லாவிட்டாலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்த முன்னணி நாடுகளில் இந்தியா ஒன்று ஆகும். இந்திய தொழில்நுட்பத் துறை சந்தையில் பைட் டான்ஸ் நிறுவனம் ரூ 7,473 கோடி (1 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்துள்ளது.

தடை

தடை

டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தடை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, தனிநபர் தகவல் தரவு ஆகியவற்றுக்காகவே இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன என்றார்.

English summary
Chinese company to suffer Rs 45000 crore loss due to ban on Tiktok's parent company Byte dance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X