For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்: இது ஒன்றும் "மேட் இன் சீனா" ப்ராடக்ட் அல்ல.. இயற்கையானது.. பூசி மெழுகும் சீன தூதர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனவை சீனா உருவாக்கியதா ? உண்மை என்ன?

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவானது என சீன தூதர் சன் வைடாங்க் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒன்று வுகான் நகரத்தில் உள்ள ஒரு மீன் சந்தையிலிருந்து பரவியதாக சொல்லப்படுகிறது. இது சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவியது.

    இதனால் சீனாவில் 1900 பேர் பலியாகிவிட்டனர். 72 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் கொல்லியான இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

     சீன அதிபருக்கு கடிதம்

    சீன அதிபருக்கு கடிதம்

    இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வண்ணம் உள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. வேலை, கல்விக்காக சீனா சென்றவர்களில் பெரும்பாலானோரை அந்தந்த நாடு மீட்டு விட்டது. அவர்களில் வைரஸ் பாதிப்புள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதம் எழுதினார்.

    முயற்சி

    முயற்சி

    அந்த கடிதத்தில் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என்றும் ஷுபே நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபருக்கு பாராட்டுகள் என்றும் மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த உயிர்கொல்லி நோயை எதிர்த்து சீன அரசு மாபெரும் முயற்சியை செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

     வாய்ப்புகள்

    வாய்ப்புகள்

    இந்த நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வைடாங்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கொரோனா வைரஸ் மீன் சந்தையிலிருந்து பரவியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறில்லாமல் வுகான் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா வைரஸ் தவறுதலாக வெளியேற்றப்பட்டதற்கான வாய்ப்புகள் ஏதேனும் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

     ஷாங்காய்

    ஷாங்காய்

    அதற்கு சன் கூறுகையில் கொரோனா வைரஸ் கொடூரமானது என்றால் அதை விட மிகவும் கொடூரமானது வதந்திகள். கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவாக்கப்பட்டவை. கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு உதவிக் கரம் நீட்டியது மனதை தொட்டுவிட்டது. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் பரவிய போது இந்தியா சார்பில் உதவுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஷாங்காய் வந்திருந்தது நினைவுக்கூரத்தக்கது என்றார் சீன தூதர்.

    English summary
    Sun Weidong when asked, "Is there a possibility that virus was released from Wuhan Institute of Virology accidentally but not from seafood market".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X