For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்!.. அரசின் இலவச வீட்டை பெற.. அண்ணி, தாயையும் விட்டு வைக்காமல் திருமணம் செய்த திருட்டு குடும்பம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இலவசமாக வீடு கிடைப்பதால் 11 பேர் ஒரே மாதத்தில் 23 முறை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக காமெடியாக ஒரு வசனம் சொல்லப்படுவதுண்டு. அதாவது ஃப்ரீயாக கொடுத்தால் பினாயிலையும் குடிப்பார்கள் என்பதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.

சீனாவின் ஷெஜியாங் மாகாணம் லிஷூய் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்நாட்டு அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறது. தற்போது மக்கள் வசிக்கும் இடங்களை அரசு கையகப்படுத்தி வேறு பகுதியில் வீடுகளை கட்டி இலவசமாக வழங்கி வருகிறது.

உன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்உன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்

திட்டம்

திட்டம்

நிலங்களை அரசுக்கு அளிப்போருக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இலவச வீடுகள் அளிக்கப்படும் என அறிவிப்பாணை வெளியானது. இதை பயன்படுத்தி வீடுகளை பெற சில குடும்பத்தினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

விவாகரத்து

விவாகரத்து

திட்டத்தின் படி கிராமத்தில் உள்ள மக்களுக்கு நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு தரும் இலவச வீடுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான்- ஷி என்ற தம்பதி திருமணமாகி அங்கு வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து நடைபெற்றது.

விவாகரத்து செய்த பான்

விவாகரத்து செய்த பான்

இந்த நிலையில் பிரிந்திருந்தால் வீடு கிடைக்காது என்பதால் விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்து அந்த சான்றிதழை காட்டி இலவச வீடு பெறும் தகுதியை பெற்றார். வீடு கிடைப்பதை அடுத்து ஷியை விவாகரத்து செய்த பான், அவரது அண்ணியை திருமணம் செய்தார்.

விவாகரத்து

விவாகரத்து

பின்னர் அண்ணியையும் விவாகரத்து செய்துவிட்டு அவரது தாயையும் திருமணம் செய்து கொண்டார். அந்த சான்றிதழை காட்டியும் வீட்டை பெற்றுக் கொண்டார். இப்படி பான் குடும்பத்தில் உள்ள 11 பேர் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்து விவாகரத்து பெற்றது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.

பரபரப்பு

பரபரப்பு

இதையடுத்து போலீஸார் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் பான் குடும்பத்தினர் மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
11 members from a family married 23 times with each other to get free house from Chinese housing scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X