For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேசாம அஸ்தியைக் கடலில் கரைச்சுட்டு சலுகையை வாங்கிக்கங்க.. சீனா அழைப்பு!

Google Oneindia Tamil News

பீஜிங்: இறந்தவர்களைப் பூமியில் புதைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அஸ்திகளைக் கடலில் கரைப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது சீனா.

மக்கள் தொகைப் பெருக்கத்தில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது சீனா. அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் தற்போதைய நிலவரப்படி சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், அங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு 33 இடங்கள் மட்டுமே உள்ளன.

Chinese government offers financial incentive to families to scatter ashes at sea due to lack of space in cemeteries

மேலும், இறுதிச் சடங்கிற்காக ரூ. 2 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையில் செலவாகிறது. இதனை கருத்தில் கொண்டு சீனா புதிய திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.

அதாவது இறந்தவர்களை எரித்து அந்த அஸ்தியை கடலில் கரைத்து விடுவது. இந்த திட்டத்தின் படி, வழக்கமாக இறுதி சடங்கிற்கு வழங்கப்படும் தொகையை விட இரு மடங்காக உயர்த்தி வழங்கவும், இறுதிச் சடங்கில் 6 பேர் வரையில் கலந்து கொள்ளவும் சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது, இனி இறுதிச் சடங்கு செலவுத் தொகை ரூ.20 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

English summary
Beijing authorities are doubling the financial incentive for people to cast the ashes of their dearly departed at sea because of a shortage of cemetery space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X