நம்முடன் ஒப்பிடும் போது ‘தலைகீழாக’ நடக்கும் சீனர்கள்....
பெய்ஜிங்: நாட்டிற்கு நாடு பழக்கவழக்கம், கலாச்சாரம் போன்றவை வேறுபடுவது சகஜமான ஒன்று தான்.
சில பொதுவான விஷயங்களை வழக்கமாக செய்து பழகி விட்ட நமக்கு அதை அயல்நாட்டவர் வித்தியாசமாக செய்யும் போது, சிறிது வினோதமாக தெரிவது இயற்கையே...
அந்த வகையில், நமது அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை அப்படியே தலைகீழாகச் செய்கிறார்களாம். அவை என்னனென்னவென்று பார்ப்போமா....

ஹலோ....
நண்பர்களைச் சந்தித்தால் ககளைக் கூப்பி வணக்கம் தெரிவிப்பது நமது பாரம்பரிய வழக்கம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்குக் கூட புதியவர்களைச் சந்தித்தால் கைகளைக் குலுக்கிக் கொள்ளத் தான் வலியுறுத்துகிறோம். ஆனால், சீனாவில், நண்பர்கள் சந்தித்தால் தாங்கள் கைகளை தாங்களே குலுக்கிக் கொள்வார்களாம்.

சாசர் கலாச்சாரம்...
அதேபோல், டீ, காபி போன்ற சூடான பானங்கள் தரும்போது சாசரை கோப்பையின் கீழ் வைப்பதற்குப் பதிலாக கோப்பையின் மேல் சாசரை வைத்துப் பரிமாறுவார்களாம் சீனர்கள்.

அப்டியே தலைகீழாய்....
வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலுவிடம் பார்த்திபன் துபாய் முகவரி கூறுவாரே, அதுமாதிரி முகவர் எழுதும் போது முதலில் ஊரின் பெயர், பிறாகு வீட்டு எண், தெரு, கடைசியில் பெயர் என தலைகீழாக எழுதுவார்களாம் சீனர்கள்.

வெள்ளை மனசு...
வெள்ளைநிறம் நமக்கு சமாதானம் மற்றும் அமைதியின் அடையாளம். கறுப்பு நிறம் தான் துக்கத்தின் அடையாளம். ஆனால், சீனாவில் வெள்ளை நிறம் தான் துக்கத்தைக் குறிக்குமாம்.

மிஸ்டர்.....
மரியாதை நிமித்தமாக ஒருவரின் பெயரை எழுதும் போது திரு என நாம் குரிப்பிடுவது மாதிரி, பெயருக்கு பின்னால் மிஸ்டர் எனக் குறிப்பிடுகிறார்கள் சீனர்கள்.