For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெறய்ய ரத்தம் வேணும்.. அதுவும் கன்னிப் பெண் ரத்தமா வேணும்... இது சீனத்து 'திரில்' கதை!!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் ரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு விநோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

பாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப்பெண்களின் ரத்தம் கேட்டு இண்டர்நெட்டில் விளம்ப்ரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

கன்னிப்பெண்கள் ரத்தம்....

கன்னிப்பெண்கள் ரத்தம்....

விளம்பரத்தில் 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப்பெண்களின் ரத்தம் தேவை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன விஞ்ஞானம்யா....?

என்ன விஞ்ஞானம்யா....?

‘கன்னிப்பெண்களின் ரத்தம்தான் தேவையா? ஆண் பிரம்மச்சாரிகளின் ரத்தம் தேவை இல்லையா? என்ன விஞ்ஞானம் இது?‘ என விளம்பரத்தைப் பார்த்து பலர் கிண்டலோடு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பெண்களுக்கு இழிவு...

பெண்களுக்கு இழிவு...

அத்தோடு, இப்படி கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்டதன்மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.

இதெல்லாம் சகஜம்ப்பா....

இதெல்லாம் சகஜம்ப்பா....

ஆனால், ‘கன்னிப்பெண்களின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன், கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான், இந்த கோரிக்கையை விடுத்தோம்‘ என விளக்கம் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

English summary
A Chinese hospital's request for blood from healthy female virgins for use in medical research has been condemned as insulting to women, state-run media reported Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X