For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணப்பெண் கிடைக்காத விரக்தி.. பெண் ரோபோவை உருவாக்கி அதையே திருமணம் செய்த சீன இன்ஜினியர்

தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் தன்னால் உருவாக்கப்பட்ட ரோபோவை திருமணம் செய்து கொண்டார் 31 வயதுடைய சீன இளைஞர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் தமக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தன்னால் உருவாக்கப்பட்ட ரோபோவை சீன இளைஞர் கரம் பிடித்தார்.

சீனாவில் பாலின விகிதம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற அந்நாட்டு கொள்கையால்
இரண்டாவதாக கருத்தரித்த ஏராளமானோர் கருவை கலைத்துவிட்டனர்.

Chinese man 'marries' robot when he had grown tired of pressure of not getting marry

அந்நாட்டில் 100 பெண்களுக்கு 113 ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. இதன் தாக்கம் இளைஞர்கள் பலருக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்ணை தேடி அலைந்து விரக்தி அடைந்த ஜெங் ஜியாஜியா என்ற 31 வயது சீன பொறியாளர் தன்னால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். அதன்படி அந்த ரோபோவுடன் 2 மாதங்கள் டேட்டிங்கிற்கு பின்னர் கருப்பு நிற சூட்டை அணிந்து கொண்டு ரோபோவை கரம் பிடித்தார்.

ஹாங்கசௌ நகரத்தில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் ஜியாஜியாவின் தாய், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், மணப்பெண்கள் திருமணத்தின்போது சிவப்பு நிற முக்காடை அணிவது அவர்களது பாரம்பரியம்.

அதன்படி இந்த ரோபோவும் ஜியாஜியாவுடன் சிவப்பு நிற முக்காடை அணிந்துள்ளதால் அந்த ரோபோவை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
A Chinese artificial intelligence engineer has given up on the search for love and “married” a robot he built himself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X