For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆத்தா மாடு வளர்ப்பா, பூனை வளர்ப்பா.. ஆனா புலிக்குட்டியை வளர்த்து சிக்கிய 3 எம்.பிக்கள்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் வீட்டில் செல்லப்பிராணியாக புலிக்குட்டிகளை வளர்த்த மூன்று எம்.பி.க்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

அதிக அபாயம் இல்லாத நாய், பூனை, மாடுகள் போன்றவற்றை மட்டுமே செல்லப்பிராணியாக மக்கள் வீடுகளில் வளர்ப்பது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு சீனாவின் கிழக்கு ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குயிங்டாவோ நகரில் 3 எம்.பி.க்கள் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக 8 சைபீரிய புலிக்குட்டிகளை வளர்த்து வந்துள்ளனர்.

Chinese officials fined for keeping tigers as pets after one leapt to death from 11-storey building

இந்நிலையில், சீன புத்தாண்டு நாளன்று ஒருவரது வீட்டில் இருந்து தப்பி வந்த புலிக்குட்டி ஒன்று 11 மாடியில் இருந்து வெளியே தாவிக் குதித்ததில் உடலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து எம்.பி. வீடுகளில் புலிக்குட்டிகள் வளர்த்து வருவது கண்டு பிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக வீட்டில் புலிக்குட்டிகளை வளர்த்த எம்.பி.க்கள் மூவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

English summary
Three lawmakers from the eastern city of Qingdao in China have been fined for keeping eight endangered Siberian tigers as pets, according to a newspaper report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X