For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூக்குக்கண்ணாடியில் சர்வைலன்ஸ் கேமரா... பார்த்த உடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சீன போலீஸ்!

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சீன போலீஸ் புதிய டெக்னாலஜி ஒன்றைப் பயன்படுத்தி வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகிலேயே சீனாவில்தான் அதிக கேமராக்கள் இருக்கிறது. சீனாவில் நீங்கள் திரும்பி பார்க்கும் இடம் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்.

இதுவரை 170 மில்லியன் கேமராக்கள் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் நடக்கும் எந்த ஒரு நபரின் அடையாளத்தையும் இதன் மூலம் ஒரே நொடியில் கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குத் திருடர்களை பிடிக்க புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளது. மூக்குக் கண்ணாடி மூலமே இனி திருடர்களை பிடிக்கலாம்.

அதிகரிக்கப்பட்டது

அதிகரிக்கப்பட்டது

தற்போது அங்கு இருக்கும் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. 400 மில்லியன் சர்வைலன்ஸ் கேமரா வைக்கப்படும். எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் சீனாவில் கண்டுபிடிக்க முடியும்.

மூக்குக் கண்ணாடி

மூக்குக் கண்ணாடி

மூக்குக் கண்ணாடி ஒன்றின் மூலம் திருடர்களை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடிகள் போலீஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து யாரைப் பார்க்கிறோமோ அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்று கண்டுபிடிக்கலாம்.

எப்படி இயங்கும்

எப்படி இயங்கும்

இந்தக் கண்ணாடியில் கேமராவுடன் ஸ்கேன் செய்யும் அமைப்பும் இருக்கும். இது ஸ்கேன் செய்தவுடன், போலீசிடம் இருக்கும் தகவலை வைத்து அந்த நபர் நல்லவரா கெட்டவரா என்று பார்க்கலாம். பொது இடங்களில் சென்று இதைச் சோதனை செய்து வருகிறார்கள்.

தொடக்கம்

தொடக்கம்

இது இப்போதே மிகவும் நன்றாக இயங்கி வருகிறது. ஏற்கனவே 7 பேர் இதன் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது சீனாவில் புதிய பாதுகாப்பை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Chinese police catches criminal with sun glass surveillance. They have already caught 7 criminals using this technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X