For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சோசலிச திபெத்' .. அடித்து ஆட முடிவு செய்துவிட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்.. பரபரப்பு பேச்சு !

Google Oneindia Tamil News

லாசா: சீன அதிபர் ஜி ஜின்பிங் "புதிய நவீன சோசலிச" திபெத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளார். திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு "அசைக்க முடியாத சுவரை" கட்டியெழுப்பவும், திபெத்திய புத்த கொள்கை, சோசலிசத்திற்கும் சீனாவிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Recommended Video

    Socialist Tibet.. கூட்டத்தில் Xi jinping அதிரடி பேச்சு

    சீனாவின் அதிபரும், அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச் செயலாளராகவும் இருப்பவருமான ஜி ஜின்பிங், திபெத் குறித்து ஏழாவது சிம்போசியத்தில் உரையாற்றினார்.

    இரண்டு நாட்கள் நடந்த இந்த கருத்தரங்கு கூட்டத்தில்., புதிய சகாப்தம் படைக்க திபெத்தில் சீன கம்யூனிச கொள்கைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டி ஜி ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில் " திபெத்தை ஒன்றுபட்ட, வளமான, கலாச்சார ரீதியாக முன்னேறிய, இணக்கமான மற்றும் அழகான பகுதியாக மாற்ற வேண்டும்."புதிய நவீன சோசலிச" திபெத்தை உருவாக்க வேண்டும்.

     சீனாவில் புயலை கிளப்பிய 19 வயது ராணுவ வீரரின் கல்லறைப்படம்.. அனல் பறக்கும் விவாதம்.. ஏன் தெரியுமா? சீனாவில் புயலை கிளப்பிய 19 வயது ராணுவ வீரரின் கல்லறைப்படம்.. அனல் பறக்கும் விவாதம்.. ஏன் தெரியுமா?

    தேசிய ஒற்றுமை

    தேசிய ஒற்றுமை

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் திபெத் முயற்சிகள் எடுக்க வேண்டும் , மக்களின் வாழ்க்கையை சீராக மேம்படுத்துவதற்கும், ஒரு நல்ல சூழலைப் பேணுவதற்கும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எல்லைப்புற பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் திபெத் முயற்சிகள் எடுக்க வேண்டும். திபெத்தியர்களின் பணி என்பது தாய்நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

    பிரிவினை பேசக்கூடாது

    பிரிவினை பேசக்கூடாது

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் திபெத் முயற்சிகள் எடுக்க வேண்டும் , மக்களின் வாழ்க்கையை சீராக மேம்படுத்துவதற்கும், ஒரு நல்ல சூழலைப் பேணுவதற்கும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எல்லைப்புற பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் திபெத் முயற்சிகள் எடுக்க வேண்டும். திபெத்தியர்களின் பணி என்பது தாய்நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

    பிரிவினை பேசக்கூடாது

    பிரிவினை பேசக்கூடாது

    அத்துடன் சாமானிய மக்களின் கல்வி மற்றும் வழிகாட்டுதலை வலுப்படுத்த வேண்டும் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மக்களை பரவலாக அணிதிரட்ட வேண்டும். இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். சோசலிசம் மற்றும் சீன நிலைமைகளுக்கு ஏற்ப திபெத்திய புத்த கொள்கை தேவை.

    சீனாவின் விருப்பம்

    சீனாவின் விருப்பம்

    பண்டைய காலங்களிலிருந்து திபெத்தில் உள்ள அனைத்து மதக்குழுக்களின் பரிமாற்றங்கள் மற்றும் ஒற்றுமையாக இருந்த வரலாற்று உண்மைகளை மீட்டெடுத்து அதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம், தேசத்தின் திசையையும் எதிர்காலத்தையும் காண அனைத்து இனத்தவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும் . அதை ஆழமாக உணர்ந்துதான் அனைத்து இனக்குழுக்களின் பரிமாற்றங்களையும் ஒருங்கிணைப்பையும் சீனா ஊக்குவிக்கிறது, " இவ்வாறு ஜி ஜின்பிங் கூறினார்.

    இந்தியாவில் தலாய்லமா

    இந்தியாவில் தலாய்லமா

    சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க முற்படும் தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதி மற்றும் "பிளவுபடுத்துபவர்" என்று சீனா கருதுகிறது. ஆனால் 1989 அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குத்தான் வழங்கப்பட்டது. திபெத்தியர்களுக்கு மத சுதந்திரம் மற்றும் சுயாட்சி உள்ளிட்ட உரிமைகளை அவர் எதிர்பார்க்கிறார். சீனா திபெத் கைப்பற்றியதன் காரணமாக 1959 ஆம் ஆண்டில் 14 வது தலாய் லாமா இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்தியா அவருக்கு தஞ்சம் அளித்தது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். புத்த மதத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால் தலாய் லாமா ஆன்மீகத் தலைவராக மக்களால் போற்றப்படுகிறார்.

    சீனா எடுத்த அதிரடி

    சீனா எடுத்த அதிரடி

    1959 ஆம் ஆண்டு சீனா திபெத்தை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் சீன ராணுவமே அங்கு எல்லை பணியில் ஈடுபடுகிறது. திபெத், இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.திபெத் 1959 முதல், அவ்வப்போது வன்முறை, அமைதியின்மை மற்றும் சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு சம்பவங்களை சந்தித்து வருகிறது. ஆனால் சீனா திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று திட்டவட்டமாக கூறி வருகிறது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து திபெத் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறிவருகிறது. இந்நிலையில் திபெத்தில் பிரிவினை பேசுபவர்களுக்கு எதிராக அதிரடியாக இறங்கி செயல்பட ஜி ஜின் பிங் விரும்புவது அவரது தற்போதைய பேச்சில் தெரிகிறது.

    English summary
    The Chinese official media reported that Chinese President Xi Jinping has called for building a “new modern socialist” Tibet, constructing an “impregnable wall” against separatism in the Himalayan region and Tibetan Buddhism also needed to adapt to socialism and to Chinese conditions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X