For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட இப்படியா பண்ணுவீங்க.. ஜூஸ் ஆர்டர் போட்டவங்களுக்கு சோப்புத்தூள் திரவம்.. பதறி ஓடிய கஸ்டமர்கள்

சீனாவில் பழஜூஸ் ஆர்டர் செய்தவர்களுக்கு சோப்புத்தூள் கலந்த திரவத்தை தவறுதலாக உணவகம் ஒன்று கொடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் பழஜூஸ் ஆர்டர் செய்தவர்களுக்கு சோப்புத்தூள் கலந்த திரவத்தை தவறுதலாக உணவகம் ஒன்று கொடுத்துள்ளது. பழ ஜூஸ் என நம்பி குடித்த வாடிக்கையாளர்கள் 7 பேருக்கு வாந்தி, குமட்டல் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தது குத்தமாடா..என்று எண்ணும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் 7 பேரை அல்லோலப்படுத்தியிருக்கிறது அந்த உணவகம். இது குறித்த விவரம் வருமாறு:-

சீனாவின் ஜெஜியாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வூகாங் என்ற பெண் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

உணவகத்திற்கு சென்றதும் ஜூஸ் ஆர்டர் செய்து இருக்கிறார். சிறிது நேரத்தில் உணவக வெயிட்டரும் அழகான கண்ணாடி பாட்டில்களில் கொண்டு வந்து மேஜையில் வைத்துள்ளார்.

ஷாக்..ஜூஸ் குடிங்க! மயக்க மருந்தால் மயங்கிய பெண்! கண் விழித்து பார்த்தால்.. வக்கிர இளைஞருக்கு கம்பி! ஷாக்..ஜூஸ் குடிங்க! மயக்க மருந்தால் மயங்கிய பெண்! கண் விழித்து பார்த்தால்.. வக்கிர இளைஞருக்கு கம்பி!

சோப்புத்தூள் கலந்த திரவம்

சோப்புத்தூள் கலந்த திரவம்

உணவ வெயிட்டர் கொண்டுவந்த பழ ஜூஸை 7 பேரும் குடித்துக்கொண்டே அரட்டை அடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஒரு சிலருக்கு லேசாக வாந்தி, குமுட்டல் ஏற்பட்டுள்ளது. ஜூஸ்தானே குடித்தோம்.. ஏன் இப்படி குமட்டுகிறது என யோசித்து இருக்கின்றனர். சிறிது நேரத்தில் கொண்டு வந்து இருப்பது ஜூஸ் அல்ல.. சோப்புத்தூள் கலந்த திரவம் என்பதை உணர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதையடுத்து அவர்கள் 7 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறியிருக்கின்றனர். இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசரணையில் ஜூஸ் கொண்டு வந்த வெயிட்டர் பணிக்கு புதிது என்பதும் பார்வை கோளாறும் கொண்டவர் என தெரியவந்தது. தவறுதலாக ஜூசில் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சோப்புத்தூளை கலந்து விட்டதாக வெயிட்டராக பணி புரிந்தவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இழப்பீடு கேட்க போவதாக

இழப்பீடு கேட்க போவதாக

இதுகுறித்து உணவகத்திடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டு இருக்கிறார். உணவகம் தரப்பிலும், வெயிட்டராக பணி செய்து வரும் பெண் பாரவை குறைபாடு கொண்டவர் என்றும் உணவகத்தில் வேலை செய்யவில்லை. உதவிக்காக அன்று ஒருநாள் மட்டுமே வந்ததாக கூறியிருக்கின்றனர். ஆனாலும் இதைக் கேட்டு எல்லாம் சமாதானம் ஆக முடியாது என விடாப்படியாக இருந்த வுகாங் உணவகத்திடம் இருந்து இழப்பீடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக ஆவேசமாக கூறியிருக்கிறார்.

ஆரஞ்சு நிறத்தில் கிடைப்பதாக..

ஆரஞ்சு நிறத்தில் கிடைப்பதாக..

இதற்கிடையே, தனது சமூக வலைத்தளத்தில் உணவகத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து இருந்த வுகாங் அதை அழித்து விட்டார். சீனாவில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் திரவங்கள் பலவும் ஆரஞ்சு நிறத்தில் கிடைப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு மொழிகள் பேக்கேஜிங்கில் இருப்பதால் அந்த மொழி தெரியாதவர்கள் தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
A restaurant in China mistakenly gave people who ordered fruit juice a liquid laced with soap powder. 7 customers who drank it believing it to be fruit juice were admitted to the hospital due to vomiting and nausea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X