For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்! - வீடியோ

    உலகையே அச்சுறுத்தி கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 வைரஸ் இதுவரை 34 ஆயிரம் மக்களை உலகம் முழுவதும் சாகடித்துள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 724436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான் 7ல் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 1.5லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஸ்பெயினில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஸ்பெயின் 6800 பலி

    ஸ்பெயின் 6800 பலி

    மிக அதிகப்படியான உயிரிழப்பு என்பது இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. 10500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள். ஸ்பெயினில் அதற்கு அடுத்தபடியாக 6800 பேர் இறந்துள்ளார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

    சீன அதிரடி

    சீன அதிரடி

    ஆனால் உலகின் மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே பாதிப்பை தடுக்க முடியும் என்று உலகமே தவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நம்பிக்கை தரும் செய்தி வெளியிட்டுள்ளது.

    நானோ பொருள்

    நானோ பொருள்

    அந்த செய்தியில், சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். 96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா தனது பாரம்பரிய மருந்து மூலம் கொரோனாவை தடுக்க பயன்படுத்தி வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

    ஆராய்ச்சிகள் நடந்துள்ளது

    ஆராய்ச்சிகள் நடந்துள்ளது

    இதனிடையே முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தும் மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சையாக சோதிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சையாக சனோஃபி மற்றும் ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தங்கள் முடக்கு வாதம் மருந்தனா கெவ்ஸாராவினைவைத்து மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்தியுள்ளன. மோனோக்ளோனல் ஆன்டிபாடி எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும் மருந்தான கெவ்ஸாராவை சோதனை செய்வது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் ரஷ்யாவில் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    English summary
    Chinese scientists have developed a new weapon to combat the #coronavirus. They say they have found a nanomaterial that can absorb and deactivate the virus with 96.5-99.9% efficiency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X