For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உருட்டி மிரட்டி வரும் கொரோனா.. சிகிச்சை அளித்த டாக்டர் பலி.. மேலும் மேலும் துயரத்தில் சீனா

கொரோனா வைரஸ் பாதித்து சீன டாக்டர் உயிரிழந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: மிரட்டி, உருட்டி எடுத்து வரும் கரோனா வைரஸ் பாதித்து.. ஒரு டாக்டரே உயிரிழந்த தகவல் சீன மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் கிலியையும் ஏற்படுத்தி வருகிறது. மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது.

    சீனாவில் வேகமாக இந்த கரோனா வைரஸ் பரவி வருகிறது.. இது ஒரு தொற்று நோய்.. 41 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

    Chinese senior doctor becomes first medical casualty to coronavirus

    கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    தொற்று பரவியுள்ள பலருக்கும் தீவிர சிகிச்சையும் டாக்டர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில், ஸின்ஹுவா ஆஸ்பத்திரி டாக்டருக்கும் இந்த தொற்று பரவி உள்ளது... அவர் பெயர் லியாங் வுடோங்.. வயது 62 ஆகிறது.. இந்த ஆஸ்பத்திரியில் அவர் சீனியர் டாக்டராம்.. அறுவை சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார்..

    கடந்த வாரமே இவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.. ஆனால், 9 நாள் போராடியும்.. சிகிச்சை பலனின்றி இன்று காலை டாக்டர் மரணம் அடைந்தார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    பரவிய கொடூர கொரோனா வைரஸ்.. தென்னிந்தியாவில் 3 மாநிலம்.. சென்னைக்கும் வருகிறதா? உண்மை என்ன? பரவிய கொடூர கொரோனா வைரஸ்.. தென்னிந்தியாவில் 3 மாநிலம்.. சென்னைக்கும் வருகிறதா? உண்மை என்ன?

    இந்த நோய்க்கு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை.. வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக நுரையீரல் மற்றும் வைரஸ் தாக்குதல் நிமோனியா காய்ச்சல், நுரையீரலின் வீக்கம் போன்றவை ஏற்பட்டு உயிரிழந்துவிடுகிறார்களாம்.. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்த நோய் தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அனைவரும் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    English summary
    Chinese senior doctor becomes first medical casualty to coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X