For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் கடும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கும் சீன வீரர்கள்.. சீனா எடுத்த திடீர் முடிவு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவில் மோதலில் ஈடுபட்டு வரும் சீன வீரர்கள், கிழக்கு லடாக்கில் நிலவும் கடுமையான குளிரை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கிழக்கு லடாக் எல்லையில் பணியாற்றும் சீன வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், திபெத்தைச் சேர்ந்த வீரர்களை இந்த படையில் சேர்ப்பதற்கு சீனா தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது.

கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறி ஆக்கிரமித்த சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி அன்று சீன வீரர்கள் இந்திய வீரர்கள் இரும்பு சிலாப், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயதங்கள் கொண்டு தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வெளிப்படையாக சீன அறிவிக்கவில்லை. அதன்பிறகு எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது.

அமைதி

அமைதி

இதன் காரணமாக சீன சர்ச்சையை உருவாக்கிய பகுதிகளில் இந்திய படைகளை குவித்தது. இதேபோல் சீனாவும் படைகளை குவித்தது. தற்போது பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கு அமைதி நிலவுகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்தைக்கு பின்னரே பதற்றம் முற்றிலும் குறைந்து அமைதி நிலவுகிறது.

இந்தியா சிறப்பு

இந்தியா சிறப்பு

எனினும் கிழக்கு லடாக்கில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளன. கடும் குளிர்காலம் நிலவும் இந்த சமயத்தில் கிழக்கு லடாக்கில் மைனஸ் 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ் வெப்பநிலை காணப்படுகிறத.. இதனால், அங்கு கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரை , அங்கு நிறுத்தப்பட்டுள்ள சீன வீரர்கள தாங்க முடியாம்ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் குளிர் தாங்க முடியாமல் சீன வீரர்கள் அவ்வபோது பலியாகி வருகின்றனர். இதனால், சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்திய வீரர்கள் குளிரை சிறப்பாக எதிர்கொள்கின்றனர். . இந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அசால்டாக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திபெத் வீரர்கள்

திபெத் வீரர்கள்

தனது நாட்டு வீரர்கள் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிக்கப்படுவதால், லடாக் பகுதியில் திபெத் வீரர்களை சேர்ப்பதற்கு சீன ராணுவம் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், அவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியாக இருந்திருக்க வேண்டும். சீன அரசால் விரட்டப்பட்டு, இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலாய் லாமாவுடன் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது..

இந்தியாவுக்கு எப்படி

இந்தியாவுக்கு எப்படி

கிழக்கு லடாக்கில் நிலவும் கடும் குளிரை, இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்ள காரணம், ஏற்கனவே இதை விட குளிரும், பனியும் நிறைந்த சியாச்சின் மலை உச்சியில் பணியில் ஈடுபட்டவர்கள். மேலும், நாட்டின் பிற பகுதிகளில் உயரமான பனிமலைகளின் உச்சியில் பணியில் ஈடுபட்டவர்கள். அதனால், லடாக்கில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அதுமட்மின்றி பல ஆண்டுகளாக இந்திய பாதுகாப்பு படைகள் திபெத்தியர்களை சேர்த்து வருகிறது. தவிர லடாக் சாரணர்கள், உள்ளுரை சேர்ந்தவர்களும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

English summary
india china standoff: Chinese troops not endure cold, Chinese army calls on Tibetan youth to work on Ladakh border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X