For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவாகரத்து செய்ததால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்து.. உலக கோடீஸ்வரியாக மாறிய பெண்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கணவனை விவாகரத்து செய்ததால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்துடன் பணக்காரராக ஒரு பெண் மாறியுள்ளார்.

சீனாவின் ஷென்ஜென் நகரைச் சேர்ந்தவர் து வெய்மின். கங்டாய் உயிரியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி யுவான் லிபிங். இவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் பிரிய முடிவு செய்தனர்.

Chinese tycoon Zhou Yahui transferred 278 million shares worth $1.1 Billion In Divorce To Wife

இதன்படி து வெய்மின் தனது மனைவியை விவாகரத்து செய்தார் . விவாகரத்துக்கு இழப்பீடாக மனைவி யுவான் லிபிங்கிற்கு தனது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் 1613 கோடி பங்குகளை வழங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ 24,320 கோடியாகும்.

கணவன் அளித்த பங்குகளை அவரே தன் கைவசம் வைத்திருப்பதால் ரூ 24,320 கோடி சொத்துக்கு அதிபதியாக யுவான் லிபிங் மாறி உள்ளார். அத்துடன் உலக பணக்கார பெண்களின் வரிசையில் யுவான் இடம் பெற்றிருக்கிறார். கனடா குடியுரிமை பெற்றவரான யுவான், தற்போது ஷென்ஜென் நகரில் வசித்து வருகிறார்.

யுவான் லிபிங் முன்னதாக கணவனின் கங்டாய் நிறுவனத்தின் இயக்குனராக கடந்த 2011 மே முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான பீஜிங் மின்காய் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை பொது மேலாளராக வேலை செய்து வருகிறார். கணவருக்கே . கங்டாய் நிறுவனத்தின் மீதான அதிகாரத்தை விட்டு கொடுத்து விவாகரத்து பெற்றுள்ளார்.இதற்கு பலனாகவே ரூ 24,320 கோடி தரப்பட்டுள்ளது.

இந்தியா மீது தொடங்கப்படும் விசாரணை.. டிரம்ப் அமைத்த குழு.. புதிய திட்டம் போடும் அமெரிக்கா.. பின்னணி!இந்தியா மீது தொடங்கப்படும் விசாரணை.. டிரம்ப் அமைத்த குழு.. புதிய திட்டம் போடும் அமெரிக்கா.. பின்னணி!

Recommended Video

    Remove China Apps-ஐ Play Store-லிருந்து நீக்கிய Google

    இதனிடையே மனைவிக்கு பங்குகளை விட்டுக் கொடுத்ததின் மூலம், வெய்மினின் நிகர சொத்து மதிப்பு ரூ 48,908 கோடியில் இருந்து ரூ 23,588 கோடியாக வீழ்ந்துள்ளது. ஆசியாவிலேயே மிகஅதிபட்சமான விவாகரத்து இழப்பீடாக இது பார்க்கப்படுகிறது.

    English summary
    Chinese tycoon Zhou Yahui transferred 278 million shares worth $1.1 Billion In Divorce To Wife, She Makes To World's Richest List
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X