For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்

Google Oneindia Tamil News

பீஜிங்: கொடிய கொரானா வைரஸால் சீனாவின் வுஹான் மாகாணம் பெரும் அழிவை சந்தித்து வருகிறது ஒருபக்கம் என்றால், சீன பெண் உணவகத்தில் குடிக்கும் ஒரு சூப் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Chinese Woman eat Bat amid Corona virus Scare

கொடிய வைரஸ் கொரானா, சீனாவின் வுஹான் நகரில் உள்ள பாம்பு, வவ்வால்கள், கோழி மற்றும் பிற பண்ணை விலங்குகளை விற்கும் கடல் உணவு சந்தையில் இருந்து உருவாகி, பரவியதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில்தான், வவ்வால் சூப்பை, சீனா பெண் ஒருவர் சப்புக்கொட்டி குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த, ஆப்பிள் டெய்லி முதன்முதலில் வெளியிட்டது இந்த வீடியோவை. அந்த பெண் அவசரமாக சாப்பிடுவதும், சாப்ஸ்டிக் மூலம் ஒரு வவ்வாலை கவ்வி பிடித்தபடி சூப் குடிப்பது போலவும் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

அப்போது அங்கே இருந்த ஒரு ஆண் சீன மொழியில், அப்பெண்ணை, இறைச்சியை மட்டுமே சாப்பிடச் சொல்கிறார். அதுவும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ பின்னர் ட்விட்டரில் பரப்பாக ஷேரானது. வீடியோவுக்கு பதிலளித்த சில நெட்டிசன்கள இது அருவருப்பானது என்று கூறியுள்ளனர்.
சீனா கொரானா வைரஸுடன் போராடும் நேரத்தில் வெளவால்களால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது அபாயத்தை அதிகரிக்கும் என்று சிலர் எடுத்துரைத்தனர்.

அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம்அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம்

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    கொரானா வைரஸ் குறைந்தது 25 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது, மேலும் 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில், வவ்வால்கள், தொற்று நோயை பரப்புவதில் முக்கிய இடம் பிடித்தவை. எனவே, இவற்றை சாப்பிட்டு நோய் பரவிவிட கூடாது என்பது நெட்டிசன்கள் பயமாக உள்ளது.

    விமானங்கள் மற்றும் ரயில்களை வுஹானிலிருந்து வெளியேற கூடாது என சீன அரசு, தடை விதித்துள்ளது. வுஹான் மக்கள், நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    A bat eating woman from China causing panic among netizen amid Corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X