For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.

ஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன.

புடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்கு ரகசியத் தொடர்பு இருப்பதாகவும் பேச்சு உள்ளது. இ்ந்த நிலையில் ஸீ மனைவிக்கு புடின் சால்வை போர்த்தியது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

ஆசியா பசிபிக் மாநாடு...

ஆசியா பசிபிக் மாநாடு...

பெய்ஜிங்கில் ஆசியா பசிபிக் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, புடின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின்போதுதான் சால்வை போர்த்திய விவகாரம் அரங்கேறியது.

அழகுப் புயல்...

அழகுப் புயல்...

ஸீயின் மனைவி ஒரு முன்னாள் பாடகி ஆவார். மிகவும் அழகானவர். சீனாவில் மிகவும் பிரபலமானவரும் கூட. தனது கணவருடன் பல நாடுகளுக்கும் பயணப்பட்டவர். பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வருவார்.

மனைவிக்கு குடை பிடித்த அதிபர்...

மனைவிக்கு குடை பிடித்த அதிபர்...

ஸீயும், பெங்கும் மிகவும் அன்னியோன்யமாக பழகி வருபவர்களும் கூட தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதை ஸீ அதிகம் விரும்புவார். ஒரு முறை வெளிநாடு ஒன்றுக்குப் போனபோது மழை பெய்ததால் தனது மனைவிக்கு குடை பிடித்தபடி அவர் வந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது சீனாவில்.

பெரிய விசயமில்லை...

பெரிய விசயமில்லை...

இருப்பினும் இதையெல்லாம் சீனர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், தனது மனைவிக்குத்தானே ஸீ குடைபிடித்தார் என்று விட்டு விட்டனர்.

சால்வைப் பிரச்சினை...

சால்வைப் பிரச்சினை...

ஆனால் புடின் சால்வை போர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் சைடில் உட்கார்ந்திருந்த புடின் எழுந்து பெங்குக்கு சால்வை போர்த்தியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புடின் சால்வை போர்த்தியதை, புன்னகையுடன் தலையைக் குனிந்தபடி ஏற்றுக் கொண்டார் பெங்.

ஒதுக்கி வைத்தார்...?

ஒதுக்கி வைத்தார்...?

ஆனால் சால்வையை வாங்கிய வேகத்தில் தனது இருக்கைக்குப் பின்புறம் அந்த சால்வையை எடுத்து வைத்து விட்டார் பெங்.

விமர்சனம்...

விமர்சனம்...

புடின் சால்வை போட்டதை சீனாவில் பலர் விமர்சித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத ஆணும், பெண்ணும் இப்படி பொது இடத்தில் தனிப்பட்ட முறையில் பொருட்களைப் பரிமாறுக் கொள்வது தவறு என்று பலர் விமர்சித்துள்ளனர். இதை நிச்சயம் ஸீ விரும்ப மாட்டார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

விவாதப் பொருள்...

விவாதப் பொருள்...

சீன சமூக வலைதளங்களில் புடின் சால்வை போட்டதுதான் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தவறில்லை...

தவறில்லை...

ஆனால் புடின் செயலை ஷாங்காயில் உள்ள ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுக் குழு தலைவர் லி ஸின் நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யாவில் பெண்களை மதிப்பார்கள். அந்த பாரம்பரியப்படிதான் சீன அதிபரின் மனைவிக்கு ரஷ்ய அதிபர் சால்வை போர்த்தினார். இதில் தவறு எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

English summary
It was a warm gesture on a chilly night when Vladimir Putin wrapped a shawl around the wife of Xi Jinping while the Chinese president chatted with Barack Obama. The only problem: Putin came off looking gallant, the Chinese summit host gauche and inattentive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X