For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நூற்றாண்டுகளுக்கு பிறகு ஏசுவின் கல்லறை திறப்பு! ஜெருசலத்தில் நடக்கிறது சீரமைப்பு

ஏசு நாதர் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ஜெருசலத்திலுள்ள கல்லறை பல வருடங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. அதில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெருசலம்: கிறிஸ்தவ மத நம்பிக்கைபடி ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட ஏசு கிறிஸ்து, கல்லரையொன்றில் புதைக்கப்பட்டார். 3வது நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். அவரது உடல் கூட அங்கு இல்லை என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கையாகும்.

கிறிஸ்தவர்கள் நம்பும் இந்த கல்லரை ஜெருசலம் நகரில் உள்ளது. அங்கு ஒரு சர்ச்சும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏசு கிறிஸ்து கி.பி. 30ல் சிலுவையில் அறையப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில், கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் அண்டோனியா மோரபொலவ் வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது.

Christ's Burial Place Exposed for First Time in Centuries

முன்னதாக 1927ம் ஆண்டு நில நடுக்கத்தால் இக்கல்லறை பாதிக்கப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் அப்போது சீரமைக்கப்படவில்லை.

கல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் அகற்றப்பட்டு அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள். இது குறித்த நிகழ்வை நேஷனல் ஜியாகிராபிக் சேனல் படம் பிடித்துள்ளது.

பாதிரியார் அதானசியஸ் மகோரா கூறுகையில், தனிப்பட்ட முறையில் இக்கல்லரையை புதுப்பிக்க எனக்கு ஆசைதான். ஆனால், பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அப்படியே விட்டுவிட எண்ணியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Burial slab that Christians believe once held body of Jesus Christ is uncovered for the first time in centuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X