For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் அரிய ”நீல” வைரம் - ஜெனிவாவில் ஏலம்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் மிக தூய்மையான, அளவில் மிகவும் பெரியதான அரிய வகை நீல வைரம் மே மாதம் 14 ஆம் தேதி ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.

"புளூ" என்று அழைக்கப்படும் இந்த வைரம் 13.22 காரட் மதிப்புடையது.பேரிக்காயின் வடிவமுடைய இந்த வைரமானது இதனுடைய சிறந்த வடிவமைப்பிற்காகவே "புளூ பர்பெக்‌ஷன்" என்று அழைக்கப்படுகின்றது.

Christie's to auction largest blue diamond

லண்டனில் உள்ள கிரிஸ்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நீல வைரம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்க்கு ஏலம் போகும் என்று கிறிஸ்டிஸ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இது, இந்திய மதிப்புக்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை விலை போகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த வைரத்தின் முன்னாள் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை என்று கிரிஸ்டிஸ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த நவம்பரில் இந்த நிறுவனத்தினால் ஏலம் விடப்பட்ட உலகின் மிக உயர்ந்த ஆரஞ்சு நிற வைரமான "தி ஆரஞ்சு" இதனுடைய ஆரம்ப கட்ட விலையான 17 டாலர்களில் இருந்து தாண்டி 35.5 டாலர்களுக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.

English summary
Christie's London is displaying the largest flawless fancy vivid blue diamond ever to appear at auction. The diamond is pegged at $21- to $25 million and is the highlight of an upcoming Magnificent Jewels sale in Geneva. Reuters/Stefan Wermuth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X