For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய விதியால் பிரச்சனை.. இஸ்ரேலில் மூடப்பட்டது ஜீசஸ் அடக்கம் செய்யப்பட்ட சர்ச்!

இஸ்ரேலில் உள்ள 'தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்' என்ற புனித தளம் திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜீசஸ் அடக்கம் செய்யப்பட சர்ச் இஸ்ரேலில் மூடப்பட்டது...வீடியோ

    ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள 'தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்' என்ற புனித தளம் திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது. இது ஜீசஸ் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று நம்பப்படுகிறது.

    கிறிஸ்துவர்களின் புனிதத்தலங்களில் இது மிகவும் முக்கியமான புனிதத்தலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கில் இந்த தலத்திற்கு மக்கள் வந்து செல்வார்கள்.

    இது முக்கியமான இரண்டு காரணங்களுக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை கிறிஸ்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதிய விதி

    புதிய விதி

    இஸ்ரேலில் இருக்கும் சர்ச்சுகளுக்கு சொந்தமாக நிறைய நிலம் இருக்கிறது. இந்த நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன்முலம் வரும் வருவாயில் அந்த சர்ச்சுகள் பராமரிக்கப்படுகிறது. இதற்கு எதிராக அங்கு அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுதான் பிரச்சனை ஆனது.

    மூடப்பட்டது

    மூடப்பட்டது

    இந்த சட்டத்திற்கு எதிராக கிறிஸ்துவ குருமார்கள் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த சர்ச் மூடப்பட்டு இருக்கிறது. நேற்று காலையிலேயே இந்த சர்ச் மூடப்பட்டு, மொத்தமாக அதிகாரிகள் அனைவரும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    எப்போது திறப்பார்கள்

    எப்போது திறப்பார்கள்

    அதேபோல் இந்த சர்ச் எப்போது திறக்கப்படும் என்று கூறப்படவில்லை. இந்த போராட்டம் நடக்கும் வரை இந்த சர்ச் இப்படி மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இது அங்கு இருக்கும் கிறிஸ்துவ மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்னொரு காரணமும் இருக்கிறது

    இன்னொரு காரணமும் இருக்கிறது

    அதேபோல் இன்னொரு காரணமும் இதற்கு கூறப்படுகிறது. சர்ச்சுகளுக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களில் உள்ள கடைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால் இனிமேல் வரிவிதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Church of the Holy Sepulchre closes due to new law in Israel. Protest are going there due to the Israeli law that threatens expropriation of church land.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X