For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பின்லேடன் 'பூச்சாண்டி பொம்மை'… சின்னப் புள்ளத்தனமாக யோசித்த சிஐஏ…!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பின்லேடன் ஹீரோ அல்ல.. அவன் ஒரு சாத்தான்.. வில்லன் என்று குழந்தைகள் மனதில் எண்ணத்தை விதைக்கும் வகையில் பின்லேடனை சாத்தானாக சித்தரிக்கும் நூதன பொம்மைகளை உருவாக்க ஒரு காலத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ திட்டமிட்டிருந்த்தாம்.

இந்த பொம்மையானது பின்லேடன் உருவத்தில்தான் இருக்கும். 12 இன்ச் கொண்ட இந்த பொம்மையின் மேற்பகுதியில் ஈசியாக கையால் பிரித்து எடுக்கும் வகையிலான தாளை ஒட்டியிருப்பார்களாம்.

அதைப் பிரித்து எடுத்தால் உள்ளே ஒரு சாத்தான் உருவில் பின்லேடன் இருப்பானாம்.

சாத்தான்... ஹீரோ அல்ல

சாத்தான்... ஹீரோ அல்ல

அதாவது பின்லேடன் உண்மையில் ஒரு சாத்தான். அவன் ஹீரோ அல்ல என்று குழந்தைகளுக்கு விளக்குவதற்காக இப்படித் திட்டமிட்டிருந்ததாம் சிஐஏ.

பச்சை நிற கண்கள்... கருப்பு நிற முகம்

பச்சை நிற கண்கள்... கருப்பு நிற முகம்

அந்த சாத்தான் உருவமானது, சிவப்பு நிறத் தோற்றத்தில், பயமுறுத்தும் பச்சை நிற கண்கள், கருப்பு நிற முகம் என்று கோரமாக இருக்குமாம்.

ஹாஸ்ப்ரோ டாய்

ஹாஸ்ப்ரோ டாய்

இந்த வகையான பொம்மைகளை உருவாக்குவது குறித்து பிரபல பொம்மைத் தயாரிப்பு நிறுவனமான ஹாஸ்ப்ரோ டாய் நிறுவனத்திடம் ஆலோசனையும் கேட்டிருந்த்தாம் சிஐஏ.

3 மாடல் பொம்மைகளும்..

3 மாடல் பொம்மைகளும்..

3 மாடல் பொம்மைகளும் கூட உருவாக்கப்பட்டனவாம். ஆனால் என்ன காரணத்தாலோ இந்த பொம்மைத் திட்டத்தை பின்னர் கை விட்டு விட்டதாம் சிஐஏ.

கை விட்டு விட்ட சிஐஏ

கை விட்டு விட்ட சிஐஏ

இந்த வகையான பொம்மைகளை தயாரிக்காமல் விட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்த செய்தியை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டு,

சீனாவில் தயாரிக்கப்பட்டு,

இருப்பினும் சீனாவில் இந்த வகையான பொம்மைகள் நூற்றுக்கணக்கில் தயாரிக்கப்பட்டு, கராச்சிக்கு கடந்த 2006ம் ஆண்டு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை விநியோகிக்கப்படவில்லையாம்.

ஜிஜோ ஆக்ஷன் பொம்மைகளைப் போல

ஜிஜோ ஆக்ஷன் பொம்மைகளைப் போல

கிட்டத்தட்ட பிரபலமான ஜிஜோ ஆக்ஷன் பொம்மைகளைப் போலவே இவையும் வடிவமைக்கப்பட்டிருந்த்தாம். இந்த பொம்மையை வடிவமைத்தவர் பெயர் டொனால்ட் லெவைன். இவர் தனது 86வது வயதில் மரணமடைந்து விட்டார்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன், அமெரிக்க கடற்படை கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
The CIA once considered producing a toy action figure of Osama bin Laden that would transform into a devil-eyed demon, hoping to persuade children abroad that he was no hero, but a scary villain. The face of the 12-inch (30 centimeter) doll was painted with a heat-dissolving material designed to peel off, revealing bin Laden to be a demonic monster, with a red race, frightening green eyes and black facial markings, the Washington Post reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X