For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமிஷனருக்கு வந்த கோபம்.. ரூமுக்குள் போன பெண் மேயர்.. விடாமல் கத்தியதால் பரபரப்பு.. எல்லாம் கொரோனாவால

பெண் மேயர் - கமிஷனர் இடையே மோதல் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

புளோரிடா: இந்த கொரோனா வைரஸால் இன்னும் என்னவெல்லாம் பாதிப்பு வரப் போகுதோன்னு தெரியலை. அமெரிக்காவில் ஒரு மாநகராட்சிக் கூட்டத்தில் மேயருக்கும், கமிஷனருக்கும் செம சண்டையாகி விட்டது. எல்லாத்துக்கும் இந்த வில்லன் கொரோனாதான் காரணம்.

உலகையே பெரும் ஆட்டு ஆட்டி வருகிறது இந்த கொரோனா. சீனாவில் ஆரம்பித்த இந்த ஆட்கொல்லி வைரஸ் இன்று இத்தாலியை உலுக்கி எடுத்து உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது.

City Mayor and Commissioner indulge in war of words due to coronovirus

அது மட்டுமா ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கூட கொரோனாவின் கோரத் தாண்டவம்தான். இந்தியாவிலும் இது புகுந்து விட்டது. ஆனாலும் நமது அரசுகள் எடுத்து வரும் அயராத நடவடிக்கைகள் மற்றும் மக்களின் விழிப்புணர்வால் ஓரளவுக்கு கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனாவை வைத்து ஒரு குடுமிபிடி சண்டை நடந்துள்ளது. மேட்டர் இதுதான். புளோரிடா மாகாணத்தில் உள்ளது லேக்வோர்த் நகரம். இந்த நகராட்சியின் அவசரக் கூட்டம் கூடியது. எதற்காக என்றால், கொரோனாவைரஸ் தொடர்பான பணிகளில் முக்கிய முடிவுகள், நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது குறித்து விவாதிக்க.

காரணம், இந்த செயல்பாடுகளில் பெரும் குளறுபடிகளும், தேக்க நிலையும் நிலவியதால் இதுகுறித்து அவசரமாக கூடி விவாதிக்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கூட்டம் கூடியது. கூட்டத்தில் பெண் மேயர் பாம் டிரையோலாவும், கமிஷனர் ஒமரி ஹார்டியும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இடையேதான் பஞ்சாயத்தே நடந்தது.

அதாவது அதிகாரத்தை மேயர் சரிவர செயல்படுத்தவில்லை. தன்னையும் செயல்படுத்தவில்லை.. அவர் ஆடும் ஆட்டத்துக்கு தன்னையும் தாளம் போடச் சொல்கிறார் என்று கடுமையான குற்றச்சாட்டை வைத்தார் கமிஷனர் ஹார்டி. இதற்கு மேயர் பாம் சரிவர பதிலளிக்கவில்லை. மாறாக மெளனம் காத்தார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ஹார்டி கத்திக் கொண்டே வாதிட்டார்.

ஹார்டியின் கோபம் அதிகமாவதைப் பார்த்த மேயர் பாம் வேகமாக தனது சேரை விட்டு எழுந்து தனது அறைக்குள் போனார். ஆனால் ஹார்டியும் விடாமல் எழுந்து நின்று பேசிக் கொண்டே இருந்ததால் 2 முறை மீண்டும் உள்ளே வந்து ஹார்டிக்கு கோபமாக பதில் கொடுத்து விட்டு உள்ளே போய் விட்டார் பாம். ஆனாலும் விடவில்லை ஹார்டி. தொடர்ந்து இடைவிடாமல் பேசிய அவர் கடைசியில் தனது கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்த ஹாலை விட்டு கிளம்பிப் போனார்.

நம்ம ஊரில்தான் இதுமாதிரியான அதிகார துஷ்பிரயோகம், துரிதமாக செயல்படாதது போன்ற பஞ்சாயத்து எல்லாம் இருக்கும் என்று பார்த்தால் அமெரிக்காவிலும் கூட இதே பஞ்சாயத்துதான் போல இருக்கு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா பயபுள்ளதான். இது எப்ப போகுதோ.. அப்போதுதான் அனைவருக்குமே நிம்மதி.

English summary
In Florida, US, A city council meeting was marred when Commissioner Omari Hardy and Mayor Pam Triolo indulged in a war of words.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X