For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ச்சும்மா... பயப்படாம தைரியமா லைக் பண்ணுங்க... !

Google Oneindia Tamil News

ரிச்மான்ட், விர்ஜீனியா: பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

நம்ம ஊரில் மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் ஒரு பெண் கருத்துச் சொல்ல, அதற்கு இன்னொரு பெண் லைக் கொடுக்க இருவரையும் தூக்கி உள்ளே வைத்த கதை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக கருதப்பட வேண்டும் என்றும் விர்ஜீனியா மாகாண கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

லைக் கொடுத்தால் அதில் என்ன தப்பு

லைக் கொடுத்தால் அதில் என்ன தப்பு

இதுகுறித்து ரிச்மாண்ட்டில் உள்ள 4வது அமெரிக்க சர்க்யூட் அப்பீ்ல் கோர்ட் அளித்த தீர்ப்பில், ஒரு பேஸ்புக்கில் லைக் கொடுப்பது என்பது குற்றச் செயல் அல்ல. அது அரசியல் சாசனச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திரமாகும். இதுதொடர்பாக கீழ்க் கோர்ட் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஷெரீப் சங்கத் தேர்தல்

ஷெரீப் சங்கத் தேர்தல்

அமெரிக்காவின் தேசிய ஷெரீப்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஹாம்ப்டன் நகர ஷெரீப் பி.ஜே.ராபர்ட்ஸ் என்பவர் போட்டியிட்டார். அவரது அலுவலக ஊழியர்கள், ராபர்ட்ஸுக்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஆதரவு கொடுத்தனர். அவரது பேஸ்புக்கிலும் லைக் போட்டனர். இதையடுத்து 6 பேரை வேலையை விட்டு தூக்கி விட்டார் ராபர்ட்ஸ்.

லைக் போட்டா டிஸ்மிஸ்ஸா...

லைக் போட்டா டிஸ்மிஸ்ஸா...

இதனால் கோபமடைந்த 6 பேரும் வழக்குப் போட்டனர். அதை விசாரித்த கோர்ட், அவர்கள் செய்தது தவறு என்றுகூறியது. இதை எதிர்த்தே ஆறு பேரும் அப்பீல் செய்தனர். அதில்தான் லைக் போடுவது அடிப்படை பேச்சு சுதந்திரம் என்று அப்பீ்ல் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

வேலை பார்க்காததால் டிஸ்மிஸ்

வேலை பார்க்காததால் டிஸ்மிஸ்

ஆனால் தான் வேண்டும் என்றே அவர்களை டிஸ்மிஸ் செய்யவில்லை என்றும் சரியாக வேலை பார்க்காததாலும் திறமைக் குறைபாடு காரணமாகவுமே டிஸ்மிஸ் செய்ததாக கூறியுள்ளார் ராபர்ட்ஸ்.

English summary
Clicking "Like" on Facebook is constitutionally protected free speech and can be considered the 21st century-equivalent of a campaign yard sign, a federal appeals court has ruled. The 4th US Circuit Court of Appeals in Richmond yesterday reversed a lower court ruling that said merely "liking" a Facebook page was insufficient speech to merit constitutional protection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X