For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயரும் வெப்பநிலை உயிருக்கு உலை: அதிகரிக்கும் மலேரியா மரணங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொலம்பியா: பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மலேரியா நோய்த்தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எத்தியோப்பியா மற்றும் கொலம்பியாவின் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கீடுகளைக் கொண்டு அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலான மேற்கு கொலம்பியாவின் ஆன்டிகுவா பகுதியின் மலேரியா பதிவுகளையும், 1993 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலான மத்திய எத்தியோப்பியாவின் டெப்ரே சீட் பகுதியின் மலேரியா பதிவுகளையும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.

மலேரியா தாக்கம்

மலேரியா தாக்கம்

மலேரியா நோயாளிகளின் சராசரி பதிவுகள் வெப்பம் நிறைந்த காலங்களில் அதிகரித்தும், குளிரான ஆண்டுகளில் குறைவாகவும் காணப்பட்டன. இது ஒரு காலநிலை விளைவுகளின் மறுக்கமுடியாத ஆதாரமாகும் என்று மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கோட்பாடுகளின் ஆய்வாளரான பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

6 லட்சம் பேர் மரணம்

6 லட்சம் பேர் மரணம்

கடந்த 2012 ஆம் ஆண்டில் மலேரியா நோயினால் 6,27,000 பேர் இறந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன.

வெப்பகாலங்களில் பாதிப்பு

வெப்பகாலங்களில் பாதிப்பு

இம்மாதிரியான வெப்பமண்டல மேட்டுப்பகுதிகளில் மலேரியா ஆபத்து வெளிப்படும்போது உள்ளூர் மக்கள் கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்பு ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.

நோய் தடுப்பு

நோய் தடுப்பு

இவர்களுக்குத் தகுந்த தடுப்பாற்றல் இல்லாதிருப்பதால் கடுமையான பாதிப்பிற்கும், இறப்பிற்கும் உள்ளாகின்றனர் என்று லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவப் பள்ளியின் மூத்த கௌரவ மருத்துவப் பேராசிரியரும், இந்த ஆய்வுகளின் இணை ஆசிரியருமான மென்னோ பௌமா குறிப்பிடுகின்றார்.

English summary
Future global warming could lead to a significant increase in malaria cases in densely populated regions of Africa and South America unless disease monitoring and control efforts are increased, researchers said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X