For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி - பராக் ஒபாமா !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பிலடெல்ஃபியா(யு.எஸ்): அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக உள்ளதாக தற்போதைய அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். களமிறக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நடந்த அக்கட்சியின் மாநாட்டில் பேசிய தற்போதைய அதிபர் ஒபாமா, ஹிலாரி வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர்.

Clinton as 'most qualified' nominee at Democratic convention - Barack Obama

ஹிலாரி தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. என்னை விடவும், பில் கிளிண்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர் என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் அவர் ஒருபோதும் தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை என குறிப்பிட்டார். அதுவே ஹிலாரி கிளிண்டன் என்ற ஒபாமா அவரை வீழ்த்த நினைப்பவர்களை பற்றி கவலை இல்லையென்றார். குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பை ஒபாமா கடுமையாக விமர்சித்தார்.

ஒபாமாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
us election 2016: Clinton as 'most qualified' nominee at Democratic convention, says Barack Obama
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X