For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. முதல் முறையாக டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் நேரடி விவாதம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் அமெரிக்க நேரப்படி இன்று இரவு தொடங்க உள்ளது.

அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Clinton, Trump set for high-stakes showdown on today night

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு இருகட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். இதில் அமெரிக்காவை வழிநடத்துவதற்கான திட்டங்கள் குறித்து சூடான விவாதங்கள் அரங்கேறும்.

அந்த வகையில் அதிபர் தேர்தலுக்கான முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலைக்கழத்தில் டிரம்ப், ஹிலாரி இடையே இன்று இரவு 9 மணி முதல் 10-30 மணி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு துவங்கும்.

English summary
Hillary Clinton and Donald Trump square off in the first presidential debate tonight at Hofstra University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X