For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா அச்சம்- கொலம்பியா சிறையில் பயங்கர மோதல்- 23 பேர் பலி

Google Oneindia Tamil News

பொகோடா: கொரோனா அச்சம் தாக்குமோ என்ற பீதியில் கொலம்பியாவின் பகோடா சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றதால் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 23 பேர் பலியாகினர். 83 பேர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் சிறைக் கைதிகளையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் டம்டம் மத்திய சிறையில் கைதிகள் தங்களை விடுவிக்க கோரி பெரும் போராட்டம் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.

    Colombia inmates riot over virus Coronavirus- 23 dead

    இலங்கையின் அநுராதபுரம் சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த சக கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைதிகளின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

    இத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்புஇத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்பு

    இதேபோல் கொலம்பியாவின் பொகோடா சிறையில் கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி வன்முறைகளில் இறங்கினர். இது மிகப் பெரும் மோதலாக வெடித்தது. இம்மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொலம்பியாவில் இதுவரை 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறையில் யாருக்கும் கொரோனா தாக்கம் இல்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Colombia officials said that 23 prisoners died and another 83 were injured in a riot over Coronavirus fear in Bogota prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X