For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பு - தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து... காயல் மன்ற நிர்வாகிகள் கோரிக்கை!

கொழும்பு - தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கிட இலங்கை வாழ் காயல் மன்ற நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கொழும்பு: கொழும்பு - தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கிட இலங்கை வாழ் காயல் மன்ற நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.

இலங்கை வாழ் காயல் நல மன்றம் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கருக்கு வரவேற்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு விழா கொள்ளுபிட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காயல் நல மன்றத் தலைவர் எம்.எஸ். ஷாஜகான் தலைமை வகித்தார். செயலாளர் ரபீஃக் ஹாஜியார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

Colombo-Sri Lanka shipping: people request

கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் காயல்பட்டினம் சேர்ந்தவராக இருந்தாலும் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்காவும் பாடுபட்டு வருவதாகவும் பேசினார்கள்.

பின்னர் காயல் நல மன்றம் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல் ஏ., விடம் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனு அளித்து அதில் உள்ள கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பேசி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டு கொண்டார்கள்.

Colombo-Sri Lanka shipping: people request

காயல் நல மன்றம் அளித்த கோரிக்கைகள் வருமாறு : கொழும்பு - தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் விரைவில் தொடங்கிட வேண்டும் என்றும் இதனால் அதிக அளவில் தமிழர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தை தேவையான வசதிகள் செய்து பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தி தூத்துக்குடி - கொழும்பு இடையேயான விமான போக்குவரத்தை விரைவில் தொடங்கிட இந்திய அரசிடம் பெற்று தரவேண்டும்.

காயல்பட்டினம் மாநகரின் உள்ளூர் சாலை கட்டமைப்பை மேம்படுத்தி பணிகளை மாநில அரசிடம் எடுத்து சொல்லி அதிகாரிளுடன் கலந்து பேசி ஆவணம் செய்யவேண்டும்.

காயல்பட்டினம் மக்கள் இன்னல்படும் கொடிய கேன்சர் நோயில் இருந்து காப்பாற்ற அதன் காரணங்கள் கண்டறிந்து அதற்குண்டான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றது.

இந்த கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் காயல் நல மன்றம் நிர்வாகிகளிடம் நீங்கள் கொடுத்த கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சொல்லி நிறைவேற்றி தர கண்டிப்பாக முயற்சி செய்வேன். அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை பற்றி எடுத்து சொல்லி நிறைவேற்றி தருவதற்கு எல்லாம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று இவ்வாறு அவர்களிடம் கூறினார். நவமணி நாளிதழின் ஆசிரியர் என்.எம். ஆமீன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் காயல் நல மன்ற பொருளாளர் அஹமது அப்துல்காதர், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தங்கள் எம்.ஏ.சி முஹம்மது நூகு, வி.எம்.ஏ. ஷேக்கனா லெப்பை மற்றும் இலங்கையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிளை ஒருங்கிணைப்பாளர் எம்.என். முஹம்மது அலி ஏற்பாடு செய்து இருந்தார்.

English summary
Sri Lankan resident Kayal Mandra executives have requested the Indian Union Muslim League to resume Colombo-Tuticorin shipping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X