For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ், அரீ வார்ஷெலுக்கு வேதியியலுக்கான நோபல்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ் மற்றும் அரீவார்ஷெல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் மருத்துவத்திற்கான நோபல் பரிசும், இரண்டாவது நாள் இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

Computer chemists win Nobel prizeMartin Karplus, Michael Levitt, Arieh Warshel win Nobel chemistry prize 2013

இந்நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க-ஆஸ்திரியரான மார்டின் கர்பிளஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க-இஸ்ரேலியரான அரீ வார்ஷெல் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

அவர்கள் மூன்று பேரும் வேதியியல் முறைகளை கணிக்க கம்ப்யூட்டர் சிமுலேஷன்களை பயன்படுத்தினர். மூலக்கூறுகள் மாதிரி வடிவமைப்புக்காக அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

English summary
Computer chemists Michael Levitt, a British and US citizen of Stanford University, US-Austrian Martin Karplus of Strasbourg University, and US-Israeli Arieh Warshel of the University of Southern California are sharing the Nobel prize in chemistry. "The Nobel Laureates in Chemistry 2013 have made it possible to map the mysterious ways of chemistry by using computers," said the Royal Swedish Academy of Sciences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X