For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உகாண்டாவில் பெருசு, இந்தியர்களுக்கு சிறுசு! சைஸ் புரியாமல் ஆணுறை தயாரிப்பாளர்கள் அவஸ்தை

By Veera Kumar
Google Oneindia Tamil News

அம்பாலா: இந்தியர்களுக்கு பெரிதாக இருப்பது பிரச்சினை என்றால், உகாண்டா நாட்டினருக்கோ, ஆணுறை சிறியதாக இருப்பதுதான் பிரச்சினையாக உள்ளதாம். இதனால்தான் அந்த நாட்டில் எய்ட்ஸ் பரவலை தடுக்க முடியாமல் அரசு தடுமாறி வருவதாக உகாண்டா நாட்டு நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இதெல்லாம் பத்தாதே..

இதெல்லாம் பத்தாதே..

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில், உகாண்டாவில் பெரும்பாலானோருக்கு ஆணுறுப்பு பெரிதாக இருப்பதாகவும், ஆனால் ஆணுறை அளவு சிறியதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இடைஞ்சல் பண்ணிகிட்டு இருந்தா எப்படி?

இடைஞ்சல் பண்ணிகிட்டு இருந்தா எப்படி?

சிறிய ஆணுறைகளை அணியும்போது வலி, அழுத்தம் போன்றவற்றை உணருவதாகவும், இதனால் உகாண்டா ஆண்கள் பெரும்பாலும் ஆணுறையை தவிர்த்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டு எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாவதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு. மேலும், ஆணுறை தயாரிப்பாளர்கள் பெரிய சைஸ் உறைகளை தயாரிக்க வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காண்பிக்கிறது.

என்னே இந்த மும்பைக்கு வந்த சோதனை

என்னே இந்த மும்பைக்கு வந்த சோதனை

ஆணுறை தயாரிப்பில், ஆண் உறுப்பின் அளவு பிரச்சினையை ஏற்படுத்திய சம்பவம், இந்தியாவிலும் நடந்துள்ளது. 2006ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், மும்பையிலுள்ள 60 சதவீதம் ஆண்கள், தங்களுக்கு ஆணுறை பொருந்தவில்லை என்று தெரிவித்திருந்தனர். சர்வதேச ஆணுறை அளவைவிட, சராசரியாக 2.4 சென்டிமீட்டர் அளவுக்கு மும்பை ஆண்களின் உறுப்பு சிறியதாக இருப்பதும், எனவேதான் ஆணுறை பொருந்தாமல் அவதிப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்தது.

அங்க அப்படி, இங்க இப்படி..

அங்க அப்படி, இங்க இப்படி..

30 சதவீத ஆண்களுக்கு ஆணுறை அளவைவிட 5 சென்டி மீட்டர் வரை ஆணுறுப்பு சிறியதாக இருந்தது. எனவே ஆணுறை அணிந்து அவர்களால் தாம்பத்தியத்தில் முழு மகிழ்ச்சியையும் எட்ட முடியவில்லை. உகாண்டாவில், ஆணுறை சிறியதாக இருப்பதால் பிரச்சினை என்றால் மும்பையில், ஆணுறை பெரிதாக இருப்பதாக பிரச்சினை. இதற்கு தீர்வு காண ஆணுறை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால்தான் பால்வினை நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

English summary
Ugandan MPs have been inundated with complaints that many condoms on sale in the east African nation are too small, warning the problem is a blow to the fight against AIDS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X