For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உலகை உலுக்கிய 9/11 தாக்குதல் தினம்: சவுதி மீது வழக்கு தொடர அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 15ம் ஆண்டு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில், 2,977 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

Congress passes bill allowing 9/11 victims' families to sue Saudi Arabia

அல்கய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தின் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்திய அல்கய்தா தீவிரவாதிகள் அவற்றில் இரண்டு விமானங்களை நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர். இதில் 2 கோபுரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்து விழுந்தது. உலகையே அதிர்ச்சியடைய செய்த இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.

இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.

English summary
US Congress has unanimously passed a bill allowing 9/11 victims' families to sue the Saudi government, on the eve of the attacks'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X