For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடங்காத நேபாளம்- இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது

Google Oneindia Tamil News

காத்மண்டு: இந்தியாவின் பகுதிகளையும் உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்.. இந்தியாவை மீண்டும் சீண்டும் நேபாளம்

    இந்தியாவுக்கு சொந்தமான எல்லைப் பகுதிகளை தனக்கு உரியது என்கிறது நேபாளம். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    Constitutional amendment for New Map tabled in Nepali Parliament

    ஆனால் சீனாவின் ஆதரவுடன் ஆட்டம் போடும் நேபாளம், திடீரென புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவின் பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.

    இந்தியாவின் லிபுலேக், கலாபானி, லிம்பியாதுராவைத்தான் நேபாளம் உரிமை கோரி பஞ்சாய்த்து செய்து வருகிறது. இந்த நிலையில் நேபாளம் நாடாளுமன்றத்தில் இன்று மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    சினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனைசினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை

    நேபாளத்தில் வரைபடத்தை மாற்றி அமைக்கும் வகையிலான அரசியல் சாசனத்திருத்தத்துக்கு ஒப்புதல் கோருகிறது இந்த மசோதா. இம்மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரும் என்பதால் இது எளிதாக நிறைவேறும்.

    சீனாவின் தூண்டுதலில் நேபாளம் செய்து வரும் இந்த அடாவடித்தனங்களுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என்பது எதிர்பார்ப்பு.

    English summary
    Nepal tabled the new map constitutional amendment in Nepal Parliament on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X