For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திப்பு சுல்தான் அணிந்திருந்த மதநல்லிணக்க "ராமர்" மோதிரம் லண்டனில் ஏலம்!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: மைசூரை ஆண்ட திப்புசுல்தான் அணிந்திருந்த மதநல்லிணக்க அடையாள சின்னமான "ராமர்" உருவம் பொறித்த மோதிரம் லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் மைசூரை ஆண்ட மாமன்னன் ஹைதர் அலி. அவரது வாரிசான திப்பு சுல்தான் கி.பி. 1782ஆம் ஆண்டு மைசூர் சுல்தானாக முடிசூடினார்.

மன்னர் திப்பு சுல்தான் இஸ்லாமியராக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருந்தனர். இதனால் திப்பு சுல்தானின் ஆட்சிக்காலம் மதநல்லிணக்க பொற்காலமாக வரலாற்றில் போற்றப்படுகிறது.

Controversial Indian ring auctioned at Christie's

அதனாலேயே திப்பு சுல்தான் தன் கைவிரல்களில் இந்து கடவுளான ராமர் உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்திருந்தார். மைசூரை 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திப்பு சுல்தான் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் படையுடன் மோதிக் கொண்டிருந்தார்.

கி.பி. 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் திப்பு சுல்தான் வீரமரணமடைந்தார். அப்போது திப்புவின் கையில் இருந்த இந்த ராமர் மோதிரம் கிழக்கிந்திய படை தளபதியான ஆர்தர் வெல்லெஸ்லியால் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மோதிரத்தில் ராமரின் பெயர், தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது 41.2 கிராம் எடையுள்ளது. இந்த மோதிரத்தை லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் நேற்று ஏலம் விட்டது.

இம் மோதிரம் சுமார் ரூ1.40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்தவர் யார் என்பதை இந்நிறுவனம் வெளியிடவில்லை.

தகவல்- படங்கள் பிபிசி தமிழோசை

English summary
A ring belonging to an 18th Century Indian ruler has been sold at an auction in London amid criticism from heritage groups. The jewelled golden ring was sold for £145,000 by Christie's auction house. It belonged to Tipu Sultan, a Muslim king, and is notable because it was inscribed with the name of a Hindu God.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X