For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏன் மாமா இப்படி செஞ்சே.. விளையாட்டு வினையானது.. தப்பிய 4 வயது சிறுவன்!

4 வயது சிறுவனை வாஷிங் மெஷினில் அடைத்து வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: விளையாட்டுக்காக ஒரு காரியம் செய்ய போய்.. அது வினையாக போய்... கடைசியில் அது வைரலாகவும் போய் கொண்டிருக்கிறது.

மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில், தமன் சென்டோசா என்ற இடத்தில் ஒரு லாண்டரி கடை உள்ளது. இந்த கடை 24 மணி நேரமும் செயல்படும் கடையாகும். அந்த பகுதியில் ரொம்ப பிரபலம் என்பதால், கடை திறந்தே இருக்குமாம்.

 வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

இந்த கடைக்கு ஒரு அம்மா, அவரது 4 வயது மகன், மற்றும் சிறுவனின் மாமா சென்றார்கள். மாமாவுக்கு 27 வயதுதான்!! அப்போது அம்மாவை ஏமாற்றி விளையாட்டு காட்டலாம் என்று மாமா, 4 வயது சிறுவனை தூக்கி கடைக்குள் இருந்த ஒரு வாஷிங் மெஷினுக்குள் உட்கார வைத்துவிட்டார்.

 பதறிய தாய், மாமா

பதறிய தாய், மாமா

இதுதான் வினையாகி போய்விட்டது. சிறிது நேரம் அம்மாவுக்கு விளையாட்டு காட்டியபின் மீண்டும் சிறுவனை வெளியே எடுக்க முயன்றால், முடியவே இல்லை. மிஷினுக்குள்ளேயே சிறுவன் மாட்டி கொண்டான். என்ன செய்வதென்றே தெரியாமல் அம்மாவும், மாமாவும் அதிர்ச்சி அடைந்து பதறி போய்விட்டார்கள். பக்கத்திலேயே ஒரு சூப்பர் மார்கெட் இருந்தது.

 சிறுவன் மீட்பு

சிறுவன் மீட்பு

அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை உதவிக்கு கூப்பிட்டார்கள். அவர்கள் வந்தும் நீண்ட நேரம் போராடியும், சிறுவனை வெளியே எடுக்க முடியவில்லை. பிறகு ஒரே ஒருவர் மட்டும் ரொம்ப ஸ்மார்ட்டாக இந்த வேலையை பார்த்தார். கச்சிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு சிறுவனை ஒருவழியாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

மாமா... கைது

மாமா சிறுவனை ஒளித்து வைத்து, பின்னர் தவித்து போகும் காட்சிகளும், மீட்கப்படும் காட்சிகளும் தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனை காணாமல் தாய் சிக்கி தவித்தார் என்று எதிர்பார்த்த மாமாதான் ரொம்பவே தவித்து போய்விட்டார்!! ஆனால் அவரை போலீஸார் கைது செய்து கூட்டிச் சென்று விட்டனர்!

English summary
Cops arrest uncle of boy trapped inside washing machine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X