For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடி பறிமுதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவின் முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் 13 டன் தங்கம் பறிமுதல்

    பெய்ஜிங்: சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் மேயர் தனது வீட்டின் அடித்தளத்தில் 13 டன் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை சீன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் 2லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடி லஞ்ச பணம் வங்கி கணக்கில் இருந்தைதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    சீனாவில் மிக அதிக அளவில் ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள் என்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இதேபோல் சீனாவில் முதல்முறையாக ஊழல் செய்தவர்கள் என்றால் 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்தின்படி அண்மைக்காலமாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சீன அதிபர் ஜீ ஜின்பிங் எடுத்து வருகிறார்.

    சென்னையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இரண்டே நாளில் 640 ரூபாய் உயர்வுசென்னையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இரண்டே நாளில் 640 ரூபாய் உயர்வு

     ஊழல் புகார்

    ஊழல் புகார்

    ஒரு காலத்தில் சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில் இருந்தவர் ஜாங் குயின் (58 வயது). இவர் டான்ஜோவின் முன்னாள் மேயரும் ஆவார். ஜாங் குயின் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து அவரது வீட்டில் சீனா போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

     மலைபோல் பணம் தங்கம்

    மலைபோல் பணம் தங்கம்

    இந்த வீட்டில் ஒரு ரகசிய பாதாள அறை இருந்திருக்கிறது. அந்த அறையை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகள் அதை திறந்து பார்த்து வாயடைத்து போயினார்கள்.தங்கமும் பணமும் மலை போல் கிட.ந்திருக்கிறது. அதன் மதிப்பு நிச்சயம் தலைசுற்றவைக்கும்.

     13 டன் தங்கம் பறிமுதல்

    13 டன் தங்கம் பறிமுதல்

    முன்னாள் மேயர் ஜாங் குயின் தனது வீட்டின் அடித்தளத்தில் 13 டன் தங்கம் பதுக்கி வைத்திருந்திருக்கிறார். அத்துடன் 37 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள பணத்தையும் அதாவது இந்திய மதிப்பில் 2லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடிக்கும் அதிகமான லஞ்ச பணத்த வங்கி கணக்கில் வைத்திருந்திருக்கிறார். அதை மொத்தமாக அள்ளிய போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

     ஆளும் கட்சி உறுப்பினர்

    ஆளும் கட்சி உறுப்பினர்

    ஜாங், மாகாண தலைநகரான ஹைனானின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளராக ஜாங் குயின் இருந்தார், சுமார் ஒன்பது மில்லியன் மக்கள் அங்கு உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளின் தரவரிசைப்படி, அவரது பணி என்பது மேயருக்கு சமமானதாக இருந்தது. அவர் ஹைனான் மாகாணத்தின் நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

     மிகப்பெரிய ஊழல்

    மிகப்பெரிய ஊழல்

    தற்போது இரு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஜாங் குயின் பொருளதார குற்றங்களுக்கான ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் அண்மைக்காலத்தில் பல கோடி பணத்தையும், டன் கணக்கில் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியது இல்லை.

     அதிபர் அதிரடி நடவடிக்கை

    அதிபர் அதிரடி நடவடிக்கை

    58 வயதான குய், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தற்போதைய ஊழல் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் 250 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது ஊழல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செயல்களுக்காக நீக்கப்பட்டார்.

    English summary
    cops found Thirteen tons of gold worth £300million and £30billion cash found at home of ‘corrupt’ Chinese mayor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X