For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரும்பத் திரும்ப ஆபாசப் படம் பார்த்த காதலனை நையப்புடைத்த காதலி

Google Oneindia Tamil News

புளோரிடா: அமெரிக்காவில் ஒரு பெண் தொடர்ச்சியாக ஆபாசப் படம் பார்த்த தனது காதலனை சரமாரியாக அடித்து மிதித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர் டெலியா பிரியம். 29 வயதான அவரை லார்கோ என்ற நகரில் போலீஸார் கைது செய்தனர். அவரது காதலர் பெயர் அந்தோணி ஹோவர்ட்.

இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இது கெட்டப் பழக்கம், இதை விட்டு விடு என்று பிரியம் வற்புறுத்தி வந்துள்ளது. சரி இனிமேல் பார்க்க மாட்டேன் என்று அந்தோணியும் உறுதி செய்ததாக தெரிகிறது.

ரகசியமாக ஆபாசப்படம்:

ரகசியமாக ஆபாசப்படம்:

ஆனால் காதலிக்குத் தெரியாமல் தொடர்ந்து ரகசியமாக படம் பார்த்து வந்துள்ளார் அந்தோணி. இதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து கையும் களவுமாக பிடித்தார் பிரியம். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தப்பித்த காதலன்:

தப்பித்த காதலன்:

இறுதியில் கோபத்தின் உச்சத்திற்குப் போன பிரியம், அந்தோணியை படுக்கையில் தள்ளி சரமாரியாக உதைத்தார், மிதித்தார், அடித்தார். மேலும் கைக்குக் கிடைத்த பொருட்களையை எல்லாம் எடுத்து அவர் தூக்கி வீசினார். ஆனால் ஒரு பொருள் கூட தன் மீது படாமல் லவாகமாக தப்பித்தார் அந்தோணி.

வீட்டு வன்முறைச் சட்டத்தில் கைது:

வீட்டு வன்முறைச் சட்டத்தில் கைது:

அதன் பின்னர் அவர் போலீஸில் புகார் கொடுக்க போலீஸார் வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பிரியமை கைது செய்தனர். அவர் 12 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

குடிபோதையில் டிரைவிங்:

குடிபோதையில் டிரைவிங்:

பின்னர் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டவர் பிரியமென்று தெரிய வந்துள்ளதாம்.

English summary
A woman battered her boyfriend after secretly videotaping him and discovering that he “was still watching porn” despite a promise to stop, police report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X