For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பாதித்த சீன பெண்ணுக்கு சிசேரியன்.. பிறந்த பெண் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனா வைரஸ் படுத்தும்பாடு.. தாய் மகளுக்கிடையே பாச போராட்டம்.. காற்றில் கட்டி அணைத்து நெகிழ்ச்சி - வீடியோ

    பெய்ஜிங்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

    காய்ச்சல், சளி, இருமல், மூச்சுப் பிரச்சினையுடன் தொடங்கும் இது இறுதியில் உறுப்புகளை செயலிழக்க வைத்து உயிர் பலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.

    மேலும் ஒரு வருஷம் சிறையா? சசிகலா 10 கோடி அபராதத்தை இன்னும் கட்டாததால் சிக்கல்மேலும் ஒரு வருஷம் சிறையா? சசிகலா 10 கோடி அபராதத்தை இன்னும் கட்டாததால் சிக்கல்

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    இந்த நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நோய் தீவிரம் அடைந்தால் உயிர் பலி ஏற்படுவது அபாயம் என்பதால் இந்த வைரஸ் நோயை உயிர் கொல்லி என்றும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

    20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

    20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

    இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 425 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சீனாவில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் மற்ற நாடுகளில் இருந்து சென்றுள்ளோர் அவசர அவசரமாக சீனாவை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.

    கர்ப்பிணி

    கர்ப்பிணி

    இந்த நிலையில் சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 30-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

    3 கிலோ எடை

    3 கிலோ எடை

    இந்த நோய் தொற்று குழந்தையை பாதிக்காமல் இருக்க அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது நலமாக இருக்கிறது. மேலும் அது 3 கிலோ எடையுடன் உள்ளது.

    சீரான ரத்த ஓட்டம்

    சீரான ரத்த ஓட்டம்

    அந்த குழந்தைக்கும் ரத்த பரிசோதனை செய்ததில் அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதியானது. அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவர்கள் தனித்தனி அறைகளில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் முழுமையாக அவர் குணமடைந்த பிறகே அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும்.

    English summary
    A Chinese Woman affected with Corona virus gives birth to healthy baby.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X