For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்.. ஷாக் நிலவரம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: மீண்டும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. கொரோனா உச்சம் பெற்று பின்னர் படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் ஒவ்வொரு நாடாக தொற்று அதிகரிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் 3,87,29,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,96,320 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலகில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,91,11,241 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 85,21,607 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Corona infection is once again on europe union countries

உலகிலேயே அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 81,48,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 73,05,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 5,141,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 1,340,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 67,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 26675 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் 22,591 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 19724 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம், போலந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தினசரி தொற்று பாதிப்பு 7 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

உயிரிழப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 716 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 694 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 221,840 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 151,779 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 111,311 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்ஸிகோவில் 84420 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Countries in the EU are fearful that the corona will once again spread at lightning speed. It is shocking that the corona has peaked and then gradually receded and every country has begun to increase in infection again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X