For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி

Google Oneindia Tamil News

ஜெனிவா: அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று குறைந்த நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

உலகில் கொரோனா தொற்றால் 3,20,83,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2,36,57,580 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 74,44,483 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,39,045 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,27,780 ஆக உயர்ந்துள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை

ஸ்பெயினிலும் அதிகரிப்பு

ஸ்பெயினிலும் அதிகரிப்பு

ரஷ்யாவில் 1,122,241 பேரும், கொலம்பியாவில் 784,268 பேரும், பெருவில் 782,695 பேரும், மெக்ஸிகோவில் 705,263 பேரும், ஸ்பெயினில் 693,556 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 665,188 பேரும், அர்ஜெண்டினாவில் 664,799 பேரும், பிரான்சில் 481,141 பேரும், சிலியில் 449,903 பேரும், இங்கிலாந்தில் 409,729 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மரணம்

அதிக மரணம்

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 981,219 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் தான் மிகஅதிகபட்சமாக 206,560 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 139,065 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 91,173 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 906 பேரும், மெக்ஸிகோவில் 651 பேரும், அர்ஜெண்டினாவில் 424 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

10 நாடுகள் விவரம்

10 நாடுகள் விவரம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு அதிகரிப்பில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும், பிரான்ஸ் 4வது இடத்திலும், அர்ஜெண்டினா 5வது இடத்திலும், இஸ்ரேல் 6வது இடத்திலும், ஸ்பெயின் 7வது இடத்திலும், கொலம்பியா 8வது இடத்திலும், ரஷ்யா 10வது இடத்திலும் உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா

கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளில் 100 களில் இருந்து 10 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் தொற்று பாதிப்பால் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் அந்த நாடுகள்அதிர்ச்சி அடைந்துள்ளன. தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் பாதிப்பை தடுப்பது கடினம் என்பதால் அதற்கான பணிகளை பல்வேறு நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

English summary
Corona infections are on the rise again in various countries, including the United States, Brazil, France, Russia, the United Kingdom, and Spain. The incidence is increasing in less infected countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X