For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடுதல் வரி...கொரோனா...ட்ரம்ப் மிரட்டல்... அசரவில்லை சீனா...எப்படி மீண்டது!!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவின் வர்த்தகத்தை நொறுக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் அந்த நாட்டின் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால், இதனால் எல்லாம் சீனாவின் பொருளாதாரத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. அதன் வளர்ச்சியை கொரோனா கால கட்டத்திலும் யாராலும் தடுக்க முடியாமல் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

Recommended Video

    GDP Explained In Tamil | Oneindia Tamil

    அமெரிக்கா மட்டும் இல்லை. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா மீது பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. சீனாவில் இருந்து இவர்களது நிறுவனங்களை வெளியேற்றினர். இதனால், சீனாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    சீனா வருவதற்கு சில நிமிடங்கள் முன்.. துரிதமாக சென்று மலைகளை கைப்பற்றிய இந்தியா.. ஆரம்பமே அதிரடி! சீனா வருவதற்கு சில நிமிடங்கள் முன்.. துரிதமாக சென்று மலைகளை கைப்பற்றிய இந்தியா.. ஆரம்பமே அதிரடி!

    ஆதிக்கம் செலுத்தும்

    ஆதிக்கம் செலுத்தும்

    ஆனாலும், கொரோனா கால கட்டமான பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் சீனாவின் உற்பத்தி அதிகரித்தே வந்துள்ளது. தற்போதும் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. ஜூலை மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து நாடுகள் மீண்ட பின்னரும் சீனா தொடர்ந்து உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளை சீனா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

    அதிக திறன் தொழிற்சாலைகள்

    அதிக திறன் தொழிற்சாலைகள்

    அமெரிக்காவின் ஏற்றுமதியை டொனால்ட் ட்ரம்ப் அல்லது கொரோனாவால் மட்டும் தடுத்து நிறுத்தி விட முடியாது. சீன தொழிலாளர்களின் குறைந்த சம்பளம், திறன் வாய்ந்த ஊழியர்கள், திறமையான கட்டமைப்புகள், அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி அந்த நாட்டின் சிறுகுறு தொழிற்சாலைகள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைத்துக்கும் கடன் வழங்குவதற்கு அந்த நாட்டின் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் தான்.

    பாதுகாப்பு கவசங்கள்

    பாதுகாப்பு கவசங்கள்

    கொரோனா கால கட்டத்திலும் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கப்பட்டது. கொரோனா கால கட்டத்தில் உலக மக்களுக்கு என்ன தேவைப்படும் என்பதை திட்டமிட்டு தயாரித்து ஏற்றுமதி செய்தது. மருத்துவமனைகளின் தேவைகளை அறிந்து உற்பத்தியில் ஈடுபட்டது. தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், வீடுகளுக்கான பாதுகாப்பு பொருட்கள், நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் என்று தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தது.

    பொருளாதார பின்னடைவு

    பொருளாதார பின்னடைவு

    இந்தக் கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் உற்பத்தி செய்யும் போயிங், விமானங்ககள் ஆகியவற்றுக்கு தேவை குறைந்தது. தற்போது இந்த நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதார பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளன.

    சீன பொருட்கள்

    சீன பொருட்கள்

    கடந்த ஜனவரி மாதம் இறக்குமதியை அதிகரிப்பது என்று அமெரிக்காவுடன் சீனா ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இதற்குக் காரணம் அமெரிக்காவின் உற்பத்தி குறைந்ததுதான். சீனாவின் உற்பத்திப் பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரியை விதித்தது. ஆனால், இந்த வரி விதிப்பால் அமெரிக்கர்கள் சீனாவின் பொருட்களை வாங்கவில்லை என்று கூற முடியாது. வாங்கிக் குவித்தனர். இதற்குக் காரணம் மொத்தக் கொள்முதல் மீதுதான் இந்த வரிவிதிப்பு இருந்ததால், அமெரிக்கர்களை பெரிதும் பாதிக்கவில்லை என்றே கூறப்பட்டது.

    வரி பாதிப்பில்லை

    வரி பாதிப்பில்லை

    சீனா மீது அதிக வரியை விதித்தால் அமெரிக்காவில் விற்பனை குறையும் என்று கணித்தது தவறானதாக அமைந்தது. இதற்குக் காரணம், சீன உற்பத்தி பொருட்களின் விலையே குறைவாக இருந்தது. இதன் மீது அதிக வரி விதிக்கப்பட்டபோதும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி 20% ஆக இருந்தது. இது இதற்கு முந்தைய 2018ஆம் ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 12.8% ஆகவும், கடந்தாண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 13.1% ஆகவும் இருந்தது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் சீனாவின் ஏற்றுமதி வெறும் 11% மட்டுமே இருந்துள்ளது. இதற்குக் காரணம் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் உச்சத்தில் இருந்ததுதான்.

    தொடரும் வெற்றி

    தொடரும் வெற்றி

    சீனா கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 700 நகரங்களை ரயில் திட்டத்தின் மூலம் இணைந்துள்ளது. அதிகளவிலான ஊழியர்கள், அதிக நேரம் உழைக்கும் மனப்பான்மை, குறைந்த சம்பளம், தொழிலாளர்கள் சங்கங்களின் மீது கட்டுப்பாடுகள் என்று சீனாவின் உற்பத்தி அதிகரிக்க காரணங்களாக அமைகின்றன. மேலும், இந்த நாட்டின் உற்பத்தியாளர்கள் பல நாடுகளைப் போல மாசுபாட்டிற்கு எதிரான சுற்றுச்சூழல் சட்டங்களால் இணைக்கப்படவில்லை என்பதும்தான் தொடர் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன.

    English summary
    Corona pandemic and Donald trump tariffs have not affected china's production and export
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X