For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

corona second wave may hit Germany

இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக விலகலை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிற ஐரோப்பிய நாடுகள்போல ஜெர்மனியில் இன்னும் ஆடம்பர விடுதிகள், பார்கள் திறக்கப்படவில்லை. 16 மாகாணங்களில் இன்னும் கட்டாய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 764 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்டுள்ளது.

இன்னும் 4 மாதங்களுக்கு ஜெர்மனியில் குளிர்காலம் நீடிக்க உள்ளது. இதை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டால் கொரோனாவில் இருந்து தப்பிவிடலாம் என்று அதிபர் தெரிவித்துள்ளார். சாலைகளில் விதிக்கப்படும் அதீத வாகன கட்டுப்பாடுகள் தேவை இல்லை எனவும், இது பொதுமக்களுக்கு தேவையில்லாத பீதியை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறஇ வருகின்றன. ஆனால் அதிபர் ஏஞ்சலா மெர்கலோ, தொடர்ந்து இன்னும் நான்கு மாதத்திற்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க குடிமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

English summary
corona second wave may hit Germany, says experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X