எங்கும் அழுகுரல்கள்.. 800-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. சார்ஸை விட கொடூர அரக்கனாக மாறிய கொரோனா!
பெய்ஜிங்: கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது. இதனால் சீனாவில் எங்கு திரும்பினாலும் மக்களின் அழுகூரல் கேட்டவாறு உள்ளது. கொரோனா சார்ஸை காட்டிலும் மிகக் கொடூரமான வைரஸ் என்பது பலி எண்ணிக்கையை வைத்தே தெரிகிறது.
சீனாவில் வுகான் நகரத்தில் உள்ள ஒரு மீன் கடையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு வெளியே வரத் தொடங்கியது. இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சு பிரச்சனை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
இந்த வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை, இரட்டையிலிருந்து மூன்று என அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரி வந்தவருக்கு கொரோனா இல்லை.. நிம்மதியாக வீடு திரும்பும் இளைஞர்

20 ஆண்டுகளுக்கு
ஆம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 800-ஐ தாண்டியது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உலகையே உலுக்கிய சார்ஸ் நோயை காட்டிலும் அதிக உயிர் பலியை ஏற்படுத்தும் வைரஸ் கொரோனா என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். மேலும் 37,200 பேர் இந்த புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா
இந்த நோய் சீனாவை மட்டுமல்லாது, இந்தியா உள்பட 25 நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாடு திரும்புபவர்களை அந்தந்த விமான நிலையத்தில் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தியே அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கின்றனர். கடந்த 2003-ஆம் ஆண்டு சார்ஸ் என்ற வைரஸ் நோய் சீனாவிலிருந்து பரவியது.

நோய் குறித்து
காற்றின் மூலம் பரவிய சார்ஸ் வைரஸால் உலகளவில் 8,422 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 774 பேர் பலியாகிவிட்டனர். ஆனால் இந்த கொரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. டிசம்பர் மாதம் கொரோனா குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு அந்நாட்டு மருத்துவர் லீ வென்லியாங் இந்த நோய் குறித்து முன் கூட்டியே கண்டறிந்துள்ளார்.

டாக்டர் உயிரிழப்பு
மேலும் இந்த நோய் சார்ஸை காட்டிலும் மிகவும் கொடூரமான வைரஸ் என குறிப்பிட்டிருந்தார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இன்னும் கொரோனாவை அழிக்கும் மருந்து மாத்திரைகள், தடுப்பு ஊசிகள் ஆகியன இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சீனாவில் எங்கு திரும்பினாலும் இறந்தவர்களின் உறவினர்களின் அழுகுரல்கள் கேட்கின்றன. இதை கட்டுப்படுத்த போதி தர்மர் மறுமுறை அவதரிப்பாரா என்ற ஏக்கம் நோய் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.