For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமேசான் காட்டுக்குள் நுழைந்து.. 15 வயது சிறுவனின் உயிரை குடித்த கொரோனா.. பெரும் ஷாக்கில் பிரேசில்

அமேசான் காட்டில் கொரோனா பாதித்த 15 வயது சிறுவன் உயிரிழந்தான்

Google Oneindia Tamil News

பிரேசில்: அமேசான் காட்டுக்குள்ளேயே நுழைந்து.. 15 வயது சிறுவனை கொரோனா அரக்கன் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மேலும் கலக்கத்தை தந்துள்ளது

Recommended Video

    அமேசானில் கொரோனாவுக்கு 15 வயது சிறுவன் பலி

    மொத்த உலகையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொரோனாவைரஸ் அமேசான் காட்டையும் விட்டு வைக்கவில்லை... உலகின் மழைக்காடுகள் என்று வர்ணிக்கப்படுவது அமேசான் காடுகள்.. இதன் பெரும்பாலான பகுதி பிரேசிலில் தான் உள்ளது... இந்த காடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த காடுகளில் மொத்தம் 300க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளன... இவர்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவுமில்லை.. காட்டின் ஆழமான பகுதிகளில்தான் இவர்களின் மொத்த குடியிருப்பும், வாழ்வும்!

    பழங்குடி

    பழங்குடி

    பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள்.. ஒருசிலர் மட்டும்தான் வெளியே சென்று வேலை பார்த்து வருகிறார்கள்.. அப்படி ஒருவர்தான் கோகமா பழங்குடியினத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய பெண்.. சுகாதாரப் பணியாளராக பணியாற்றுகிறார்.. இவருக்குதான் முதன்முதலில் தொற்று உறுதியானது.. இதனால் அப்பெண், அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    அமேசான் காட்டுக்குள் இப்படி தொற்று ஏற்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானதுமே அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எனவே உடனடி நடவடிக்கைகளை பிரேஸில் அரசு எடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் குழு கோரிக்கையும் வைத்தது.. அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

     தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இந்நிலையில், யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டான். இதனால், சிறுவனை ரொராரிமா மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். பூர்வகுடிகளில் இதுவரைக்கும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் சிறுவனின் உயிரிழப்பு மேலும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

     பீதி - கலக்கம்

    பீதி - கலக்கம்

    சின்ன சின்ன குக்கிராமங்களில் பூர்வகுடிகள் வாழ்ந்து வருவதால், தொற்று எளிதில் பரவக்கூடும் என்ற அச்ச நிலை உள்ளது.. அழிந்து வரும் இனம் இது என்பதாலும், இவர்களுக்கு தொற்று பரவினால் சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் கூட இல்லை என்பதும் கூடுதல் கவலையாக உள்ளது... எனினும் சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது!!

    English summary
    coronavirus: 16 year old amazon tribal boy dies after being infected with virus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X