For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் மார்க்கெட்டில் உருவான வைரஸ்.. மருந்து கண்டுபிடிக்கவில்லை.. தவிக்கும் சீனா!

சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸ் பெரும்பாலும் வுஹன் நகரத்தில் மீன் மார்க்கெட் ஒன்றில் உருவாகி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸ் பெரும்பாலும் வுஹன் நகரத்தில் மீன் மார்க்கெட் ஒன்றில் உருவாகி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

உலகம் முழுக்க தற்போது சீனாவின் கோரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை என்னவென்றே தெரியாத, புதிய வைரஸ் ஒன்று சீனாவில் மக்களை தாக்கி வருகிறது. கேரளாவிலும் ஒரு பெண்மணிக்கு இந்த கோரோனோ வைரஸ் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மொத்தமாக மூடப்பட்ட வுஹன் நகரம்.. உயரும் பலி எண்ணிக்கை.. சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! மொத்தமாக மூடப்பட்ட வுஹன் நகரம்.. உயரும் பலி எண்ணிக்கை.. சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்!

எங்கே தோன்றியது

எங்கே தோன்றியது

சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. சீனாவின் உஹன் பகுதியில்தான் முதலில் இது தாக்கப்பட்டது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது உருவாகி இருக்கலாம்.ஆனால் இதுவும் கூட உறுதியாக சொல்லப்படவில்லை. அங்கிருந்து மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.

மாற்றலாம்

மாற்றலாம்

இந்த கோரோனோ வைரஸ் எப்படி உருவானது என்று தெரியவில்லை. சீன மக்கள் பாம்பு தொடர்பான உணவுகளை உண்பார்கள். இதனால் அங்கிருந்து நோய்கள் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சில புழுக்களில் இருந்தும் கூட இந்த வைரஸ் பரவி இருக்கலாம். இதனால் சீனா முழுக்க தற்போது உணவுப்பொருட்கள் மீது மிக கடுமையான சோதனைகள் நடந்து வருகிறது.

மருந்து இல்லை

மருந்து இல்லை

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் எப்படி உருவானது என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியும். அதனால் வைரசை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். தற்போது வரை வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மட்டும் சில மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

சீனா பாதிக்கும்

சீனா பாதிக்கும்

சீனாவில் 2003ல் சார்ஸ் காரணமாக 850 பேர் பலியானார்கள். அப்போதும் சீனா இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆனது. அதேபோல்தான் இப்போதும், மருந்து கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம் என்று கூறுகிறார்கள். அதுவரை பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரும் வாய்ப்புள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரம் பெரிய அளவில் அடி வாங்கும் என்கிறார்கள்.

English summary
Coronavirus attack on China might come from a fish market in Wuhan city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X