For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராபத்தில் அமெரிக்கா? வீட்டிலேயே இருங்க.. யாரும் வெளியே வராதீங்க.. கலிபோர்னியா ஆளுநர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் மெத்தமாக முடங்கி உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி வருகிறார்கள். மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் கலிபோர்னியா ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை நிலவரப்படி 2,45,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,048 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 88,465 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உலகிலேயே மிக அதிக அளவாக இத்தாலியில் 3405 பேர் இறந்துள்ளனர். 41000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் இன்று புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக சீனாவில் 81000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மெனி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா.. மொத்தம் 4 ஸ்டேஜ்.. 3வது ஸ்டேஜிலிருந்துதான் கோரத் தாண்டவம் ஆரம்பம்.. முழு விவரம் கொரோனா.. மொத்தம் 4 ஸ்டேஜ்.. 3வது ஸ்டேஜிலிருந்துதான் கோரத் தாண்டவம் ஆரம்பம்.. முழு விவரம்

அமெரிக்கா

அமெரிக்கா

இந்நிலையில் உலக வல்லரசான அமெரிக்காவும் கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட முக்கிய பகுதிகளில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணம். இந்த மாகாணம் கொரோனா வைரஸ் பிரச்சனையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

870 பேர் பாதிப்பு

870 பேர் பாதிப்பு

கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் 4 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த மாகாணத்தில் இதுவரை 870 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க மக்களை வீட்டை விட்டு அடுத்த 8 வாரங்களுக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.வீட்டுக்குள்ளேயே இருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வலிறுத்தி உள்ளது.

வீட்டில் இருக்க வலியுறுத்தல்

வீட்டில் இருக்க வலியுறுத்தல்

இது தொடர்பாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் விடுத்த அறிவிப்பில், மாநிலம் முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுகிறேன். மிகமிக அவசியம் என்றால் மட்டும் வெளியில் செல்லுங்கள். இப்படி நாம்இருந்தால் 56 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்றார்.

13000 பேர் பாதிப்பு

13000 பேர் பாதிப்பு

கலிபோர்னியா மாகாணத்தை தாண்டி, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கொரானா வைரஸால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருவதால் அமெரிக்காவில் மிகப்பெரிய பீதி ஏற்பட்டுள்ளது மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
California Governor Gavin Newsom on Friday issued a statewide “stay at home” order, directing residents to leave their home only when extremely necessary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X