For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலியில் அதிர்ச்சி.. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரே நாளில் 812 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11,591 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    Cuban doctors and nurses help Italy to fight against coronavirus

    உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

    Coronavirus cases: Italy reports 812 deaths in one day

    அந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட முடியாமல் இத்தாலி திணறி வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்றால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவதால் சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்கு காலஅவகாசம் கூட இல்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஸ்பெயினில் செத்து மடியும் மக்கள்.. ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கி 913 பேர் உயிரிழப்பு ஸ்பெயினில் செத்து மடியும் மக்கள்.. ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கி 913 பேர் உயிரிழப்பு

    இந்நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 4,050 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000 த்தை தாண்டி உள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 775000த்தை தாண்டி உள்ளது. 37000க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவும் மேற்கத்திய நாடுகளிலுமே கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    The death toll from the coronavirus pandemic in Italy rose by 812 to 11,591
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X