For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு அந்நாட்தில் வைரஸ் பரவிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கரன்சிகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Coronavirus: China decides to clean the currency, just like India's demonetization

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு அந்நாட்தில் வைரஸ் பரவிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கரன்சிகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளனர்.

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 71000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும். அதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதை தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

    14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்! 14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்!

    சீனா எப்படி

    சீனா எப்படி

    சாதராண வெப்பநிலையில், இந்த வைரஸ் உயிரில்லாத பொருட்களில் 14 நாட்கள் வரை இருக்கும். சீனாவில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவியதற்கு இது மிக முக்கிய காரணம் ஆகும். இந்த வைரஸ் அதிகமாக சீனாவின் பண நோட்டுகள் மூலம் பரவி உள்ளது. அதாவது நோயாளிகள் தொட்ட பண நோட்டுகளை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் நோய் பரவி உள்ளது.

    புதிய நோட்டு

    புதிய நோட்டு

    இதனால் இந்த வைரஸை கட்டுப்படுவது பெரிய கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. இதனால்தான் தற்போது சீனாவில் இந்த பண (யென்) நோட்டுகளை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி முதற்கட்டமாக இந்த நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளனர். பின்னர் அதற்கு பின் புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளனர். மொத்தம் 600 பில்லியன் யென் மதிப்பு கொண்ட நோட்டுகளை இவர்கள் திரும்ப பெற இருக்கிறார்கள்.

    புதிய நோட்டு எப்படி

    புதிய நோட்டு எப்படி

    கிட்டத்தட்ட இது டீமானிடைசேசனுக்கு இணையானது ஆகும். இதன் மதிப்பில் அமெரிக்க டாலரில் 85.6 பில்லியன் டாலர் ஆகும். இது சீனாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். அதேபோல் சீனா அங்கு புழக்கத்தில் இருக்கும் மீதம் உள்ள நோட்டுகளை எல்லாம் வெப்பம் மூலம் சுத்தம் செய்ய இருக்கிறது. இதற்காக முதலில் அந்த நோட்டுகள் மீது யு வி கதிர் வீச்சு செலுத்தப்படும். இதன் மூலம் அந்த நோட்டுகள் வெப்பப்படுத்தப்படும்.

    மீண்டும் பயன்பாடு

    மீண்டும் பயன்பாடு

    இதன் மூலம் அதில் இருக்கும் வைரஸ் கிருமிகள் அழிய வாய்ப்புள்ளது. அதன்பின் அதை 14 நாட்கள் பூட்டிய லாக்கரில் வைத்து இருப்பார்கள். வைரஸ் வெளியே செல்லாமல் லாக்கரில் வைத்து இருப்பார்கள்.பின் 14 நாட்கள் கழித்து மீண்டும் அதை யு வி கதிர் வீச்சு மூலம் சூடுபடுத்துவார்கள். இதன் மூலம் அதில் இருக்கும் வைரஸ்கள் எல்லாம் மொத்தமாக அழிக்கப்படும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதன்பின் அந்த நோட்டுகள் மீண்டும் பயன்படுத்தப்படும்.இந்த காலக்கட்டத்தில் புதிய நோட்டுகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டுகள் மட்டுமின்றி மற்ற பொது சேவை சாதனங்களையும் இதேபோல் சுத்தம் செய்ய உள்ளனர். அதாவது பேருந்து, விமானம், ரயில், மெட்ரோ போன்ற சாதனங்களையும் இவர்கள் சுத்தம் செய்ய இருக்கிறார்கள்.

    English summary
    Coronavirus: China decides to clean the currency notes, just like the demonetization of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X