For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 142 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 68000 பேர் ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 1665 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

     coronavirus china: figures showed 68,500 cases of the illness and 1,665 deaths

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 142 பேர் கொரோனாவில் உயிரிழந்திருக்கிறார்கள் என சீனா சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தகவல் ஆகும்.

    முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று 143 பேர் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி அது 142 ஆக குறைந்துள்ளது. இந்த மரணங்கள் எல்லமே ஹுபே மாகாணத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கிறது. சீனாவில் தற்போது நிலைமை மோசமாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

     coronavirus china: figures showed 68,500 cases of the illness and 1,665 deaths

    ஹுபே மாகாணத்தில் வுகான் நகரில் வனவிலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் வதை கூட்டத்தில் இருந்து கோவிட் 19 என்ற புதிய வைரஸ் அதாவது கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று சீன நம்புகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளவர்களே இதுவரை கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்து வருகிறார்கள். அதிலும் வயதானவர்களே அதிகம் இறக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சீனாவை ஆளும் ஜி ஜீன்பிங் தலைமையிலான கம்யூன அரசுக்கு பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் மாறி உள்ளது.இந்த பிரச்னையில் மீண்டும் வருவதற்குள் எத்தனை பேரைசீனா பறிகொடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுளுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுமே தங்கள் நாட்டிற்கு கொரோனா பரவி விட்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    English summary
    coronavirus china: figures showed 68,500 cases of the illness and 1,665 deaths, 2,009 new cases, most of them in Hubei.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X